சிங்கப்பூரில் வேலை செய்த பணியாளரின் விரல்கள் அனைத்தும் துண்டிப்பு : கணவன்-மனைவி தொடர்பில் அதிர்ச்சி தகவல்!

வீட்டு வேலைகளை மட்டும் செய்ய வேண்டி பணியில் அமர்த்தப்பட்ட தமது இல்லப் பணியாளரை, ஒரு சிங்கப்பூர் குடும்பம் பேக்கரி கடையிலும் வேலை செய்யச் சொன்னதால் சோகமான சம்பவம் அரங்கேறியுள்ளது.

திருவாட்டி ரபியா பஹரூதின் அப்துல் என்ற பணியாளர், தவறுதலாக பேக்கரி இயந்திரத்தை கையாண்டு, அவருடைய கையில் எல்லா விரல்களும் துண்டாகின.

மஸ்துரா அப்துல் காலில் என்ற பெண் இல்லப் பணியாளரை பேக்கரி கடையில் வேலை செய்ய வைத்த காரணத்தினால் இந்த சம்பவம் நடந்துள்ளது.

பணியில் முன் அனுபவம் இல்லாத ஒருவரை அந்த வேலையில் ஈடுபட கட்டாயப்படுத்தியுள்ளார்.

ஏற்கெனவே  இதற்கு முன்பு பணியாற்றிய இல்லப் பணியாளரையும் இதே போல கடையில் வேலை செய்ய வைத்தார்.

அப்போதும் அவருக்கு விரல்களில் காயம் ஏற்பட்டது. இந்த நிலையில்,  வெளிநாட்டு ஊழியர் வேலைச் சட்டத்தின்கீழ், 46 வயதான மஸ்துராவுக்கு நான்கு வார சிறைத் தண்டனையும் 10,400 வெள்ளி அபராதமும் விதிக்கப்பட்டது.

அதே சட்டத்தின்கீழ் குற்றம் சாட்டப்பட்ட மஸ்துராவின் கணவர் அஃபென்டி பி. ஹுசேனுக்கு 8,700 வெள்ளி அபராதம் விதிக்கப்பட்டது.

வேலையிடப் பாதுகாப்பை உறுதி செய்ய தவறிய கணவன்-மனைவி இருவரும் பொதுச் சுகாதாரச்சட்டத்தின் கீழ் குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டனர்.