சிங்கப்பூரில் குழிதோண்டும் இயந்திரம் வெளிநாட்டு தொழிலாளியின் காலில் விழுந்து விபத்து..!

Worker rescued after excavator topples and traps his left leg (Photo : Stomp)

சிங்கப்பூர் டாம்பைன்ஸில் உள்ள வீட்டுவசதி வாரிய பணிநிலையத்தில், கடந்த செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 17) அன்று அகழ்வாராய்ச்சிக்கு குழிதோண்டும் இயந்திரம் தொழிலாளி ஒருவரின் காலில் விழுந்து விபத்து ஏற்பட்டது.

இந்த இயந்திரம் அவரின் காலில் விழுந்து இறுகி பிடித்துக்கொண்ட காரணத்தால், அவரை மீட்பதில் சிக்கல் ஏற்பட்டது.

இந்நிலையில், காலை 11.10 மணியளவில் டாம்பைன்ஸ் அவென்யூ 9இல் நடந்த இந்த சம்பவம் குறித்து சிங்கப்பூர் சிவில் பாதுகாப்பு படைக்கு (SCDF) தகவல் கொடுக்கப்பட்டது. இதில் இயந்திரத்தை தூக்கும் நடவடிக்கையின் போது கவிழ்ந்ததாக கூறப்படுகிறது.

இந்த விபத்தில் சிக்கிய அந்த தொழிலாளி வெளிநாட்டவர் என்று நம்பப்படுவதாக, எஸ்.சி.டி.எஃப் அதிகாரிகள் உறுதிப்படுத்தினர்.

ஸ்டாம் (STOMP) வெளியிடப்பட்ட புகைப்படங்களில், பாதிக்கப்பட்டவர் புல் வெளியிலும், இயந்திரம் அவரின் கால் மேல் கிடப்பதையும் காட்டுகின்றன, மேலும் உடன் இருந்த மற்ற தொழிலாளர்கள் அவருக்கு ஆறுதல் கூறுவதும் இடம்பெற்றுள்ளது.

மீட்பு பணிக்கு பயன்படுத்தப்பட்ட ஆரஞ்சு நிற இயந்திரம் (PHOTO: STOMP)

மேலும், புகைப்படத்தில் ஒரு ஆரஞ்சு நிற இயந்திரம் காணலாம், அது மீட்பு பணிக்கு பயன்படுத்தப்பட்டது.

இதனை அடுத்து, பாதிக்கப்பட்டவர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக சாங்கி பொது மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அவரது உடல்நிலை பற்றி தகவல் வெளியாகவில்லை.

மேலும், இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருவதாகவும், அந்த இடத்தில் பணிகளை நிறுத்த உத்தரவிட்டதாகவும் மனிதவள அமைச்சகம் தெரிவித்துள்ளது.