சிங்கப்பூரில் S$3,400 சம்பளம் வாங்கும் வெளிநாட்டு ஊழியர் வேலையை விட போவதாக முடிவு.. அவர் கூறும் காரணம் பலருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தலாம்!

racist-passenger-india-Singapore
Pic: Raj Nadarajan/TODAY

ஒருவர் வேலையை விடுவதற்கு இது ஒரு காரணமா என்று நாம் புலம்பும் அளவிற்கு இவர் கூறும் பதில் நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

சுமார் S$3,400 சம்பளம் வாங்கும் தன் வேலையை விட்டுவிட நினைக்கும் வெளிநாட்டு ஊழியர் ஒருவர் கூறும் காரணம் என்னவென்றால், தனது வேலையில் அதிக ஓய்வு நேரம் இருக்கிறதாம்.

கிரேன் கவிழ்ந்து விழுந்ததில், பெரிய குழாயில் சிக்கிக்கொண்ட ஊழியர் உயிரிழப்பு – தொடரும் சோகம்

கென்ஜி ஓங் என்பவர், தனது சலிப்பான வேலையின் துயரங்கள் குறித்து சமீபத்தில் புலம்பெயர்ந்த ஊழியர் பேஸ்புக் குழுவில் பதிவேற்றினார்.

அலுவலகத்தில் கணினியை ஆன் செய்ததில் இருந்து தாம் என்ன செய்வது என்று தெரியாமல் புலம்புவதாகவும், அந்த அளவிற்கு வேலை இல்லை என்பதையும், வெறும் “20 முதல் 30 மின்னஞ்சல்கள் மட்டுமே பார்ப்பது” தான் வேலை என்பதையும் அவர் பதிவிட்டுள்ளார்.

கோவிட்-19 நடவடிக்கைகள் தளர்வுக்கு பின்னர் அலுவலகத்திற்குத் திரும்பியதால், அங்கு நேரத்தைக் கடத்துவது மிக கடினமாக இருப்பதாக அவர் வெளிப்படையாகப் பகிர்ந்து கொண்டார்.

“உண்மையைச் சொல்லப்போனால், நான் வீட்டிலிருந்து வேலை செய்யும் போது, ​​ இரண்டு அல்லது மூன்று மணி நேரத்தில் என் வேலையை முடித்து விடுவேன்” என்பதையும் சுட்டிக்காட்டினார் அவர்.

காலையில் அலுவலகத்திற்கு வந்து கணினியை ஆன் செய்தவுடன், ​​”எக்செல் சீட்டில் தட்டச்சு செய்வது போல் நடிப்பேன்” என்று அவர் வெளிப்படையாக கூறினார்.

இதற்கு பலர் நகைச்சுவையாகவும், ஆச்சரியமுடனும் கருத்துக்களை அந்த பதிவில் தெரிவித்து வருகின்றனர்.

அவர் எந்த நாட்டை சேர்ந்தவர் என்பது அந்த பதிவில் இடம்பெறவில்லை.

“கோழியை விட மாவு அதிகம்”…கோழி தட்டுப்பாடு இல்லாத நேரத்தில் ஏன் இந்த அநியாயம் – வெறுப்படைந்த தம்பதி