ஒர்க் பெர்மிட்டில் குறிப்பிட்ட வேலையை பார்க்காமல் வேறு வேலையை பார்த்தவருக்கு செக்

work permit salary increase
Pic: MOM

சிங்கப்பூர் போலீஸ் அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு அதனை சமூக ஊடகத்தில் பதிவிட்டு பரபரப்பை ஏற்படுத்திய வெளிநாட்டு பெண், ஒர்க் பெர்மிட் அனுமதி விண்ணப்பத்தில் போலியான தகவல்களை கொடுத்தது தெரியவந்துள்ளது.

சீன நாட்டவரான 29 வயதுமிக்க ஹான் ஃபெய்சி என்ற அந்த பெண், தனது ஒர்க் பெர்மிட் அனுமதியில் குறிப்பிட்ட கிளர்க்காக (clerk) வேலையை விட்டுவிட்டு வேறு வேலை பார்த்ததாக கூறப்பட்டுள்ளது.

வெளிநாட்டு ஊழியர்களுக்கு இடைவேளை, ஓய்வு உள்ளிட்டவை கட்டாயம் – அக். 24 முதல் புதிய விதிகள் அறிமுகம்

இந்நிலையில், வெளிநாட்டு மனிதவள வேலைவாய்ப்பு சட்டத்தின்கீழ் அவர் மீது இரண்டு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளதாக சொல்லப்பட்டுள்ளது.

ஒர்க் பெர்மிட் அனுமதி விண்ணப்பத்தில், KDL Elements என்ற நிறுவனத்தில் கிளர்க் (clerk) வேலையில் சேர்ந்திருப்பதாக அவர் பொய்யாக குறிப்பிட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

அதற்கு பதிலாக, ஆகஸ்ட் 1 முதல் அக்டோபர் 11 வரை, அவர் ஒரு ஃப்ரீலான்ஸ் பெண்ணாக பல்வேறு இடங்களில் செயல்பட்டதாக சொல்லப்பட்டுள்ளது.

பொது மருத்துவமனையில் (SGH) செவிலியரை தகாத வார்த்தைகளால் திட்டியதாக அவர் மீது முன்னர் குற்றம் சாட்டப்பட்டது.

வெளிநாட்டு ஊழியர்களை ஏற்றிச்சென்ற லாரியின் மேலே கட்டப்பட்ட மரப்பலகை.. காற்றில் பறந்து கார் சேதம் (வீடியோ)