சிங்கப்பூரில் 6 மணிநேரம் வேலை பார்க்கும் ஊழியர்கள்… லாரியை ஓட்டும் முன் கட்டாய ஓய்வு

ஒர்க் பெர்மிட் அனுமதி உடைய வெளிநாட்டு ஊழியர்களுக்கு PR

சிங்கப்பூரில் மற்ற ஊழியர்களை லாரியில் ஏற்றி செல்வதற்கு முன் ஊழியர்களுக்கு கட்டாய ஓய்வு வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

இரண்டு வேலைகளை செய்யும் அதாவது ஓட்டுநர்களாகவும், குறைந்தபட்சம் ஆறு மணிநேரம் வேலை செய்யும் ஊழியர்களுக்கு, விரைவில் குறைந்தபட்சம் 30 நிமிட ஓய்வு அளிக்க வேண்டும் என முதலாளிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வேலை முடிந்து வந்த உடனே மற்ற ஊழியர்களை லாரியின் பின் தளங்களில் ஏற்றிச் செல்ல அனுமதிக்காமல் அவர்களுக்கு முறையான ஓய்வு அவசியம் என சொல்லப்பட்டுள்ளது.

“வேண்டும் வேண்டும் சம்பளம் வேண்டும்” – வெளிநாட்டு ஊழியர்கள் பதாகையுடன் போராட்டம்

அதே போல, லாரியின் பின் தளங்களில் தொழிலாளர்களைக் ஏற்றி செல்லும் அனைத்து லாரிகளுக்கும் ஒரு “வாகன நண்பரை” முதலாளிகள் நியமிக்க வேண்டும்.

இந்த வாகன நண்பர்களுக்கு அவர்களின் அத்தியாவசியமான பங்கு குறித்து விளக்கப்பட்டிருக்க வேண்டும், அதாவது ஓட்டுநர் லாரியை ஓட்டுவதற்குத் தகுதியுள்ளவரா என்பதையும் வாகனம் ஓட்டும்போது விழிப்புடன் அவர் இருக்கிறாரா என்பதையும் வாகன நண்பர் சரிபார்க்க வேண்டும்.

அடுத்த ஆண்டு 2023 ஜனவரி 1, இல் இந்த மேம்பாட்டு நடைமுறைகள் நடப்புக்கு வரும்.

மேற்கண்டவை ஊழியர் போக்குவரத்தின் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கான புதுப்பிக்கப்பட்ட நடவடிக்கைகளில் ஒன்றாகும்.

இதனை மனிதவள அமைச்சகம் (MOM), நிலப் போக்குவரத்து ஆணையம் (LTA) மற்றும் போக்குவரத்து காவல்துறை (TP) ஆகியவை இன்று (அக்.19) அறிவித்தன.

“வெளிநாட்டு ஊழியர்களுக்கு பதில் சிங்கப்பூரர்களை எடுக்கலாமே” – சிங்கப்பூரர்கள் வாதம்: துணைப் பிரதமர் விளக்கம்