ஆபத்தான லாரி பயணங்கள், வெளிநாட்டு ஊழியர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய மாற்று வழிகள்..!

(photo: mothership)

சிங்கப்பூரின் வெளிநாட்டு ஊழியர்களை கொண்டு செல்ல லாரிகள் இன்னும் பயன்படுத்தப்படுகின்றன. அவர்கள் பெருமளவு அபாயங்களை சந்திக்கின்றனர். ஒரு விவாத நிகழ்ச்சியில் இது குறித்தும், காயங்கள் மற்றும் இறப்புகளைத் தடுக்க இன்னும் என்ன செய்ய முடியும் என்பதையும் விவாதித்துள்ளனர்.

சில ஆண்டுகளுக்கு முன்பு, வெளிநாட்டு ஊழியர் லீ (அவரது உண்மையான பெயர் அல்ல) மற்றும் சக ஊழியர்கள், ஒரு லாரியின் பின்புறத்தில் அமர்ந்து வேலைக்குச் சென்று கொண்டிருந்தனர். பின்புற டெக்கில் உலோகப் பொருட்களும் இருந்தன, ஓட்டுனரின் கவனக் குறைவால் லீ மற்றும் அவரது சக ஊழியர் காயம் அடைந்தனர்.

மருத்துவமனையில் லீ பரிசோதித்து பார்த்தபோது இடுப்பில் ஒரு தசை கிழிந்திருப்பது கண்டுபிக்கப்பட்டது. அது மிகவும் கடினமாக இருந்ததாகவும் அவரால் குனிந்து வேலை பார்க்கவோ, சுமைகளை தூக்கவோ முடியவில்லை என கூறியிருந்தார். லாரிகளில் பின்னிருந்து பயணம் செய்வது ஆபத்தானது என்றும் அவர் தெரிவித்தார்.

அவர் சிங்கப்பூரில் 14 ஆண்டுகளாக பணியாற்றியுள்ளார், அவரும் அவரது சக ஊழியர்களும் போக்குவரத்து முறையைப் பற்றி அடிக்கடி பேசியுள்ளதாகவும், அவர்களுடைய முதலாளி அதில் உள்ள அபாயங்கள் பற்றி நன்கு அறிந்திருந்தும், எந்த வித முயற்சிகளும் எடுக்காததால் அதை பற்றி பேசுவது அர்த்தமற்றது என்று அவர் கருதுவதாக கூறினார்.

லாரிகளில் தொழிலாளர்கள் அபாயகரமாக பயணம் மேற்க்கொள்வது சமீபத்திய விபத்துக்களுக்குப் பிறகு மீண்டும் கவனத்திற்கு வந்துள்ளது.

ஏப்ரல் மாதத்தில் தொழிலாளர்கள் கொண்டு செல்லும் லாரிகளில் இரண்டு விபத்துக்கள் நிகழ்ந்தன. பான் தீவு நெடுஞ்சாலையில் ஏற்பட்ட விபத்துக்களில், இந்திய தொழிலாளி சுகுனன் சுதீஷ்மோன் மற்றும் பங்களாதேஷ் டோஃபசல் ஹொசைன் ஆகிய இருவர் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

அந்த விவாத நிகழ்ச்சியில் (டாக்கிங் பாயிண்ட்) ஒரு சில சிங்கப்பூரர்கள் லாரியின் பின்புறத்தில் சவாரி செய்வதை ரசிப்பதாக கூறினர். ஒரு மணி நேரத்திற்கு 50 கிலோமீட்டர் வேகத்தில் லாரி செல்வதால், தொங்குவது கடினம் என்று அவர்கள் பின்னர் உணர்ந்தனர்.

தினமும் வேலைக்கு லாரியில் செல்ல முடியுமா என்ற கேள்விக்கு, எனக்கு மனைவி, மகன் உள்ளனர், இது போன்ற பயணம் ஆபத்தானது என ஒருவர் தெரிவித்தார்.

இருப்பினும், லாரிகளில் ஊழியர்களை ஏற்றிச் செல்வது தொடர்கிறது, ஏனெனில் மற்ற போக்குவரத்து முறைகள் கட்டணம் உயர்ந்தவை ஆகும்.

சாலை போக்குவரத்து சட்டத்தின்கீழ், வாகனங்களின் உரிமையாளர் அல்லது வாடகைக்கு எடுப்பவரின் வணிகத்தை மேற்கொள்ளும் ஊழியர்களைத் தவிர, பயணிகளுக்கு சரக்கு வாகனங்கள் பயன்படுத்த அனுமதிக்கப்படுவதில்லை.

மூத்த அமைச்சர் (போக்குவரத்து) எமி கோர், குறிப்பிடத்தக்க நடைமுறை மற்றும் செயல்பாட்டு சிக்கல்கள் உள்ளதாகவும், வெறும் செலவுக் கருத்தாய்வுகளுக்கு தாண்டி இது சர்வதேச அளவில் ஒரு அசாதாரண நடைமுறை அல்ல” என்றும் மே மாதம் பாராளுமன்றத்தில் கூறியிருந்தார்.

ஒரு வேன் வாங்கினால், வேன் காலையிலும் இரவிலும் ஊழியர்களை அழைத்துச் செல்லும், ஆனால் மீதமுள்ள நாட்களில் அதை (போக்குவரத்துக்கு) பயன்படுத்த முடியாது. ஆனால், லாரிகள் எப்பொழுதும் பொருட்களை கொண்டு செல்வதால் பயன்பாட்டுக்கான செலவு வேன் மற்றும் பேருந்தை விட குறைவாக உள்ளதாக பிகியூ பில்டர்ஸ் இயக்குனர் பெஹ் கே பின் கூறினார்.

மேலும், எதிர்காலத்தில் பேருந்துகள் மற்றும் வேன்களில் ஊழியர்களை ஏற்றிச்செல்ல தொழில்துறை முன்னெடுத்தாலும், லாரிகளைப் பயன்படுத்துவது எப்போதுமே செலவு குறைந்த மற்றும் நடைமுறை வழி என்று அவர் கூறினார்.

இது போன்று லாரிகளில் பயணம் மேற்கொள்வது பல நாடுகளில் அனுமதிக்கப்படுவதில்லைல் எனவும் சில நாடுகள் அனுமதிப்பதாகவும் கூறப்படுகிறது.

சிங்கப்பூர் 2009 மற்றும் 2010ஆம் ஆண்டுகளில் சில பாதுகாப்பு விதிகளை மேம்படுத்தியது. உதாரணமாக, அதிகபட்ச பயணிகள் திறன் தெளிவாகக் காட்டப்பட வேண்டும். பயணிகள் அமர்ந்திருக்கும்போது, ​​வாகனத்தின் டெக்கிலிருந்து 1.1 மீட்டருக்கு மேல் இருக்கக்கூடாது. குறைந்தபட்சம் நான்கு சதுர அடி இருக்கை இருக்க வேண்டும்.

எதிர்காலத்தில் ஆக்கபூர்வமான சில மாற்றங்கள் மேற்கொள்வதன் மூலம் பயணங்களை எளிதாக்கலாம் என கருத்துக்கள் முன்வைக்கப்பட்டது. கைப்பிடிகள், பெல்ட்டுகள் மற்றும் பல பாதுகாப்பு அம்சங்கள் பொருத்தப்பட வேண்டும் என பல யோசனைகள் முன்வைக்கப்பட்டன.

மேலும், சிறு நிறுவனங்கள் ஒன்றாக செயல்படுவதன் மூலம் பேருந்து பயணங்களை குறைத்த செலவுகளில் மேற்கொள்ளலாம் எனவும் விவாத நிகழ்ச்சியில் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.