பரிசோதனை கட்டுப்பாடு தளர்வு: ஊழியர்கள் மகிழ்ச்சி!!

Photo: TODAY

சிங்கப்பூரில் கடந்த பிப்.18 முதல் உணவகங்கள், உணவங்காடி நிலையங்கள் மற்றும் கடைத்தொகுதிகளில் பணிபுரியும் ஊழியர்களும் மற்றும் விமான நிலைய, துறைமுக எல்லைகளில் பணிபுரிபவர்களும் வழக்கமான COVID-19 பரிசோதனையை செய்துகொள்ள தேவையில்லை என கூறப்பட்டது.

கொரோனா உருமாறிய கிருமியின் தனிப்பட்ட தன்மைகளுக்கு ஏற்ப நடப்பு விதிமுறைகளைத் திருத்தி அமைக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக இந்த ஏற்பாடு நடப்புக்கு வருகிறது என சுகாதார அமைச்சர் திரு. ஓங் செய்தியாளர் சந்திப்பில் கூறினார். இந்த அறிவிப்பை சம்பந்தப்பட்ட பல துறைகள் வரவேற்றுள்ளன.

வழக்கமான COVID-19 பரிசோதனையை செய்யும் விதிமுறை தளர்த்தப்பட்டதால் தங்களின் நிதி, செயல்பாடுகள் சார்ந்த சுமை குறைவதாக சில நிறுவனங்கள் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தி நிறுவனத்திடம் கூறியுள்ளன.

Work pass அனுமதியில் வேலை பெற தந்திரமாக செயல்பட்ட வெளிநாட்டு ஊழியருக்கு சிறை – 19 ஊழியருக்கு நிரந்தர தடை

இந்த தளர்வு மூலம் ஊழியர்கள் மற்றும் மேற்பார்வையாளர்களிடம் பதற்றம் குறைந்துள்ளதாகவும், ART பரிசோதனைக் கருவிகளால் சேரும் பிளாஸ்டிக் குப்பையின் அளவும் குறைவதாகவும் சிலிகி சாலையில் அமைந்துள்ள கடைத்தொகுதியின் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டார்.

ART பரிசோதனைகள் செய்வதால் ஒரு ஊழியருக்கு சராசரியாக 20 வெள்ளி செலவு செய்யவேண்டியிருந்தது என்றும், இப்போது அத்தகைய செலவுகள் குறைவதாக தனியார் நிறுவனம் ஒன்று குறிப்பிட்டுள்ளது.

விதிமுறை தளர்த்தப்பட்டதால் வெளிநாட்டு ஊழியர்கள் தங்குவிடுதிகளிலும் இனி திட்டமிட்டு பரிசோதனைகளை மேற்கொள்ள தேவையில்லை என்றும், இதனால் தங்களின் செயல்முறைகள் சீராவதாக தங்குவிடுதிகள் கூறியுள்ளன.

மேலும், தங்குவிடுதிகளைச் சுத்தமாக வைத்திருப்பது, பாதுகாப்பை உறுதி செய்வது, மேம்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொள்வது போன்ற பணிகளில் இனி கூடுதல் கவனம் செலுத்தமுடியும் என சில தங்குவிடுதிகள் தெரிவித்தன.

இந்திய பயணிகளுக்கான பயண சேவையை அதிகரிக்க உள்ள சிங்கப்பூர்.!