பணியிட விபத்துகளில் பரிதாபமாக உயிரிழக்கும் தொழிலாளர்கள் – நிறுவனங்கள் பாதுகாப்பை உறுதி செய்யுமாறு பிரதமர் லீ வலியுறுத்தல்

Bond between PAP, NTUC must be sustained and strengthened, says PM Lee (Photo : Straits Times)

சிங்கப்பூரில் பணியிடங்களில் உயிரிழக்கும் வேலையாட்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதுகுறித்து திங்கள் கிழமை (May 9) சிங்கப்பூர் பிரதமர் பேசியதாவது “சமீபகாலமாக பணியிடங்களில் உயிரிழப்பு அதிகமாக ஏற்படுகின்றன,மேலும் இவை ஏற்கத்தக்கவை அல்ல ” என்று கூறினார். கடந்த மாதம் 10 பணியிட உயிரிழப்புகள் நிகழ்ந்ததை தொடர்ந்து திங்கள்கிழமை முதல் இரண்டு வார பாதுகாப்பு நேரத்தை விதிக்குமாறு நிறுவனங்கள் வலியுறுத்தப்பட்டுள்ளன.

இந்த ஆண்டு நடைபெற்ற பணியிட உயிரிழப்புகளின் எண்ணிக்கை 20 ஆக உள்ளது. இது 2016-ஆம் ஆண்டிற்கு பிறகு அதிகளவிலான உயிரிழப்புகளின் எண்ணிக்கை ஆகும். மனிதவள அமைச்சகம் (MOM),பணியிட பாதுகாப்பு மற்றும் சுகாதார கவுன்சில் (WSHC) மற்றும் தேசிய தொழிற்சங்க காங்கிரஸ் (NTUC) நடவடிக்கைகளுக்காக கால அவகாசத்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர் .

“பணியிடங்களில் ஏற்படும் விபத்துகளில் உயிர் இழப்புகள் ஏற்படுவதை தடுக்க நாங்கள் பல வருடங்களாக முயற்சிகளை எடுத்து வருகிறோம்.அதில் நாங்கள் நல்ல முன்னேற்றம் அடைந்துள்ளோம் ” என்று திங்களன்று ஃபேஸ்புக் பதிவில் பிரதமர் லீ தெரிவித்துள்ளார்.

நிறுவனங்கள் பணியிட பாதுகாப்பு குறித்து மறுபரிசீலனை செய்வதன் மூலம் பாதுகாப்பு செயல்முறைகளை வலுப்படுத்தலாம் மற்றும் தொழிலாளர்களால் எழுப்பப்படும் பாதுகாப்பு பிரச்சினைகளை தீர்க்கலாம் என்று கூறினார்.

பணியிட விபத்துக்கள் மீண்டும் ஏற்படாமல் இருக்க சமீபத்தில் நிகழ்ந்த பயங்கரமான விபத்துகள் மற்றும் சூழ்நிலைகளிலிருந்து தற்காத்துக்கொள்ளும் நிலைகளை தொழிலாளர்களுக்கு கற்பிக்க வேண்டும் என்று நிறுவனங்களுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளன. பாடுபட்டு பணியாற்றுவது உணவுக்கு தானே! உயிரிழப்புக்கு அல்ல! எனவே, தொழிலாளர்கள் பாதுகாப்புடன் பணியாற்றுவது சிறந்தது ஆகும்