சிங்கப்பூரில் ஊழியர்களின் சம்பளத்தை உயர்த்திய 4ல் மூன்று நிறுவனங்கள்!

migrant-workers stray dogs-cats bonds
ItsRainingRaincoats/Facebook

சிங்கப்பூரில் கடந்த 2022 ஆம் ஆண்டு பொருளாதாரம் வளர்ச்சி அடைந்ததை அடுத்து, ஊதியம் 0.4 சதவீதம் அதிகரித்தது.

இருப்பினும், இது 2021 ஆம் ஆண்டில் இருந்ததை விடக் குறைவு தான் என்று மனிதவள அமைச்சகம் (MOM) இன்று (மே 29) தெரிவித்தது.

கடந்த ஆண்டு லாபம் அதிகரித்ததன் காரணமாக, சிங்கப்பூரில் உள்ள நான்கு நிறுவனங்களில் கிட்டத்தட்ட மூன்று நிறுவனங்கள் ஊழியர்களுக்கு ஊதிய உயர்வை வழங்கியுள்ளன.

அதாவது கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு அடிப்படை சம்பளம் அதிகரித்துள்ளதாகவும் அது குறிப்பிட்டது.

பணவீக்கம் நிலவிய நேரத்திலும் ஊதியம் அதிகரித்துள்ளதாக MOM கூறியுள்ளது.

இருப்பினும், இந்த 2023 ஆம் ஆண்டு மொத்த ஊதிய வளர்ச்சி மிதமானதாகவே இருக்கும் என்று மனிதவள அமைச்சகம் தெரிவித்துள்ளது.

சிங்கப்பூரின் முக்கிய நிகழ்வுகள், வேலைவாய்ப்புகள், வெளிநாட்டு ஊழியர்கள் தொடர்பான செய்திகளை உடனே அறிய மைக்செட்டின் வாட்ஸ்ஆப் குழுவில் உடனே இணையுங்கள்கிளிக் செய்யவும்