சிங்கப்பூரில் ஊழியர்கள் பற்றாக்குறை ஏற்படும் அபாயம் – நிறுவனங்களுக்கு எச்சரிக்கை!

PIC: TODAY

சிங்கப்பூரில் ஒமிக்ரான் வகை கிருமித்தொற்று சம்பவங்களின் எண்ணிக்கை கடந்த சில தினங்களில் அதிகரித்துள்ளதால் குறுகியகால ஊழியர் பற்றாக்குறை ஏற்படலாம் என நிறுவனங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், இந்நிலையை சமாளித்து வர்த்தகத்தைத் தொடர்ந்து நடத்த திட்டங்களை மறுபரிசீலனை செய்யவேண்டும் என முதலாளிகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஒமிக்ரான் வகை கிருமித்தொற்று அதிவேகத்தில் பரவும் தன்மை கொண்டது என்பதால் சிங்கப்பூரில் ஒமிக்ரானால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூரில் வன விலங்குகளுக்கு தனிப்பாலம் அமைத்தும் தொடரும் விபத்துகள்..!

குறுகியகால ஊழியர்கள் பற்றாக்குறை ஏற்படாமல் தடுக்க, சிங்கப்பூர் மனிதவள அமைச்சகம் (MOM), தேசிய தொழிற்சங்கக் காங்கிரஸ், சிங்கப்பூர் தேசிய முதலாளிகள் சம்மேளனம் ஆகியவற்றை உள்ளடக்கிய முத்தரப்பு பங்காளிகளுடன் சுகாதார அமைச்சகம் ஒருங்கிணைந்து கூட்டாக வெளியிட்ட அறிக்கையில் சில யோசனைகள் கூறப்பட்டது.

அதன்படி, வேலையிடத்தில் ஊழியர்களுக்கு முறையான பரிசோதனைகளை நடத்துவது, வர்த்தக நடவடிக்கைள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டால் அதற்கு ஏற்ற விடுமுறை, சம்பள ஏற்பாடுகளை செய்வது நிறுவனத்தின் முக்கிய நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்படாமல் இருக்க இரு குழுக்களைப் பயன்படுத்துவது ஆகியவற்றில் நிறுவனங்கள் கவனமாகத் திட்டமிட வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டது. அதிக அளவு ஊழியர் பற்றாக்குறை ஏற்பட்டால் அதற்கு திட்டமிடுவதற்கு ஏற்ப இவை வெளியிடப்பட்டுள்ளது.

கொரோனா நிலைமையை கட்டுப்படுவதற்காக அமைக்கப்பட்ட பல அமைச்சககளுக்கு இடையிலான பணிக்குழு, வர்த்தகத்தை தொடரும் திட்டங்களை வகுத்து தயாராக இருக்க வேண்டும் என முதலாளிகளை வலியுறுத்தியுள்ளது. மேலும்,
ஊழியர்களை வழக்கமான பரிசோதனைகளை செய்ய ஊக்குவிப்பது, பாதுகாப்பு நிர்வாக நடைமுறைகள் போன்றவற்றை அமல்படுத்தி கிருமித்தொற்று பரவலை குறைத்து வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சிங்கப்பூரில் எகிறிய தொற்று பாதிப்பு… ஒரே நாளில் 13,208 பேருக்கு உறுதி