விதிகளை மீறிய ஊழியர்கள்… அதிரடி சோதனையில் பிடித்த அதிகாரிகள் – S$10000 வரை அபராதம் விதிக்கப்படலாம்!

ஊழியர் விளையாட்டாக செய்த காரியம் அவருக்கே வினையாய் போனது - சிறை விதிப்பு
(PHOTO: Mothership)

சிங்கப்பூரில் முகக்கவசம் அணியாமல் செயல்பட்ட ஊழியர்கள் மீது சிங்கப்பூர் உணவு அமைப்பு நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளது.

பொதுமக்களிடம் எழுந்த புகாரின் பேரில் சில கடைகளில் கவனத்துடன் சோதனை மேற்கொள்ளப்பட்டது.

இந்த அதிரடி சோதனை கடந்த ஜனவரி 29 முதல் ஏப்ரல் 14ஆம் தேதி வரை நடந்தது. அதாவது சுமார் 451 உணவு கடைகளில் MFA அமைப்பு சோதனை மேற்கொண்டது.

அதில் உணவகங்கள், உணவுக் கண்காட்சிகள் உள்ளிட்ட பல உணவு கடைகள் அடங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சோதனை மேற்கொண்டதில் சுமார் 43 கடைகளில் இருந்த ஊழியர்கள் எச்சில் படாமல் பாதுகாக்கும் முகக்கவசத்தை அணியவில்லை என சொல்லப்பட்டுள்ளது.

இதற்கு S$10000 வரை அபராதம் விதிக்கப்படலாம் என்பது சட்டம். அதே போல அபராதம் மற்றும் 1 ஆண்டு சிறை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.