சிங்கப்பூரில் சமீபத்தில் அதிகரித்த வேலையிட மரணங்கள்: விபத்தை தடுக்க அசத்தல் திட்டத்துடன் MOM ரெடி

(Photo: TODAY)

சிங்கப்பூரில் சமீப காலமாக வேலையிட விபத்துகள் அதிகரித்த வண்ணம் உள்ளன, இந்த வாரத்தில் கூட 2 வேலையிட மரணங்கள் குறித்த செய்தியை நாம் அறிந்தோம்.

இந்நிலையில், சட்டத்தின்படி பாதுகாப்பு அதிகாரிகள் தங்கள் முக்கிய கடமையைச் செய்ய வேண்டும் என்று மனிதவள அமைச்சகம் (MOM) கூறியுள்ளது.

சிங்கப்பூரில் S$3,400 சம்பளம் வாங்கும் வெளிநாட்டு ஊழியர் வேலையை விட போவதாக முடிவு.. அவர் கூறும் காரணம் பலருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தலாம்!

ஊழியர் பற்றாக்குறை நெருக்கடிக்கு மத்தியில் அதிகாரிகளுக்கு வேறு பணிகள் ஒதுக்கப்பட்டாலும் கூட பாதுகாப்பில் சமரசம் செய்துவிட கூடாது என்றும் MOM வலியுறுத்தியது.

“பாதுகாப்பில் ஏற்படும் குறைபாடுகளுக்கு நிறுவனங்கள் இன்னும் கூடுதலாக பொறுப்பேற்று தங்களின் பாதுகாப்பு வழிகளை ஆராய்ந்து செயல்படுத்த வேண்டும், அதற்கான வழிமுறைகளையும் MOM ஆராய்ந்து வருகிறது.”

வேலையை தொடங்கும் முன் பாதுகாப்பு குறித்த உறுதிமொழி எடுத்துக்கொள்ள வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.

கட்டுப்பாடு தளர்வுக்கு பின்னர் அதிகாரிகள் கூடுதல் கவனம் செலுத்து வருகின்றனர் என்பதையும் அது குறிப்பிட்டது.

அதிகாரிகளின் நிபுணத்துவ திட்டத்தை மேம்படுத்தும் திட்டங்கள் வரும் மாதங்களில் வெளியாகும் எனவும் கூறப்பட்டுள்ளது.

கிரேன் கவிழ்ந்து விழுந்ததில், பெரிய குழாயில் சிக்கிக்கொண்ட ஊழியர் உயிரிழப்பு – தொடரும் சோகம்