சிங்கப்பூரில் வேலையிடத்தில் சரிந்து விழுந்த கிரேனின் ஒரு பகுதி

(Photo: Safety Watch-SG Facebook)

சிங்கப்பூரில் நேற்று (ஏப்ரல் 20) தனா மேரா கோஸ்ட் சாலையில் உள்ள ஒரு வேலையிடத்தில் கிராலர் கிரேனின் ஒரு பகுதி சரிந்து விழுந்தது.

அந்த சம்பவத்தில் யாரும் காயமடையவில்லை என்று சி.என்.ஏவின் கேள்விகளுக்கு பதிலளித்த மனிதவள அமைச்சகம் (MOM) தெரிவித்துள்ளது.

வெளிநாட்டு ஊழியர்கள் விபத்து: 7 ஊழியர்கள் மருத்துவமனையில்… இருவர் ICUவில் சிகிச்சை

கிரேன் கட்டுமான வேலைகளுக்குப் பயன்படுத்தப்படும்போது அதன் கீழ்ப் பகுதி செயலிழந்ததாக MOM கூறியுள்ளது.

இந்த வேலையிடத்தில் சீனா கம்யூனிகேஷன்ஸ் கன்ஸ்ட்ரக்ஷன் கம்பெனி லிமிடெட் (சிங்கப்பூர் கிளை) நிறுவனத்தை சேர்ந்தோர் பணிபுரிந்ததாகவும், இந்த சம்பவம் குறித்து விசாரித்து வருவதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அதே போல, நேற்று முன்தினம், தெங்காவிலுள்ள கட்டுமான தலம் ஒன்றில் சுமார் 12 மீட்டர் உயரமுள்ள எஃகு தூணின் ஒரு பகுதி சரிந்து விழுந்தது.

அதிஷ்டவசமாக அது கட்டுமான ஊழியர்களின் காலியான தற்காலிக தங்குமிடத்தின் மேலே விழுந்தது.

அந்தச் சம்பவத்திலும் யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை.

சிங்கப்பூரில் தங்கும் விடுதியில் வசிக்கும் 2 முறை தடுப்பூசி போட்டுக்கொண்டவருக்கு தொற்று!