வேலையிடங்களில் சாதாரணமாக ஏற்படும் உயிரிழப்புகள்: இனி ஊழியர்களுக்கு நல்ல செய்தி தான்

new-portal-enables-lower-wage workers
Pic: AFP

மோசமான வேலையிட பாதுகாப்பு மற்றும் சுகாதார நடைமுறைகளை கொண்ட நிறுவனங்களுக்கு சிங்கப்பூர் அரசாங்கம் செக் வைத்துள்ளது.

பாதுகாப்பு குறைபாடுகள் காரணமாக விபத்துகள் அதிகம் நிகழ்வதால் உயிரிழப்புகள் கணிசமாக அதிகரித்துள்ளன.

இந்த ஆண்டில் வேலையிட இறப்புகள் சட்டென்று அதிகரித்தது நாம் அறிந்த ஒன்றுதான். இதனை கட்டுப்படுத்தும் நோக்கில் பாதுகாப்பு குறைபாடுகளை கொண்ட நிறுவனங்களுக்கு கடுமையான அபராதங்கள் விதிக்கப்பட உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

Suntec City மொத்த தளத்தையும் வாங்கிய வெளிநாட்டவர் – கொடுத்த தொகை $38.8 மில்லியனாம்!

இந்த கடும் அபராத நடைமுறை நேற்று செவ்வாய்க்கிழமை (ஜூன் 14) முதல் நடைமுறைக்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

அதேபோல, மனிதவள அமைச்சகம் (MOM) ஆய்வு செய்யும் போது குறைபாடுகள் கண்டறியப்பட்டால் அதற்கு அபராதம் S$1,000 இலிருந்து S$2,000 வரை, அதாவது S$5,000 வரை அதிகரிக்கப்படலாம்.

வேலை நிறுத்த உத்தரவுகள் விதிக்கப்பட்ட நிறுவனங்கள் தங்கள் செயல்முறைகளை முழுமையாக மதிப்பாய்வு செய்ய வெளிப்புற தணிக்கையாளர்களை ஈடுபடுத்த வேண்டும்.

இந்த ஆண்டில் இதுவரை மட்டும் 26 வேலையிட மரணங்கள் பதிவாகியுள்ளன.

மகிழ்ச்சியான செய்தி: கோழி ஏற்றுமதி மீதான தடையை ஓரளவு நீக்கிய மலேசியா!