Workshop-களில் தொடர்ச்சியாக கார் திருட்டு… சிக்கிய ஐவர்!

வெளிநாட்டு ஊழியரை

பணிமனைகளில் (Workshops) இருந்து தொடர்ச்சியாக கார் திருட்டுகளில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் ஐந்து பேரில் 18 வயது ஆடவர் ஒருவர் கைது செய்யப்பட்டதாக வெள்ளிக்கிழமை (ஜூன் 3) போலீசார் தெரிவித்தனர்.

கடந்த மாதம் மே 23 மற்றும் மே 31 க்கு இடையில், Kim Chuan Terrace மற்றும் காக்கி புக்கிட் சாலை 4ஐச் சுற்றியுள்ள பணிமனைகளில் இருந்து ஆறு கார்கள் திருடப்பட்டதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

“செக்ஸ், செக்ஸ், செக்ஸ்” என்று சிறுமியை துன்புறுத்திய வெளிநாட்டு கட்டுமான ஊழியருக்கு சிறை!

முதற்கட்ட விசாரணையில், பணிமனைகளில் நிறுத்தப்பட்ட கார்கள் திறக்கப்பட்ட நிலையில், அதில் சாவிகள் இருந்ததும் தெரியவந்தது.

இந்நிலையில், விசாரணைகள் மற்றும் CCTV கேமரா உதவியுடன் 6 பேரின் அடையாளங்களை போலீசார் கண்டறிந்தனர்.

இதில் சந்தேகநபர்களான 18 முதல் 45 வயதுக்குட்பட்ட ஐந்து பேரும் கடந்த ஜூன் 1 முதல் நேற்று ஜூன் 3 வரை கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதில் ஐந்து கார்கள் மீட்கப்பட்டுள்ளது, மேலும் 42 வயதுடைய ஆண், 34 மற்றும் 36 வயதுமிக்க இரண்டு பெண்களிடம் விசாரணைகள் தொடர்கின்றன.

வெளிநாட்டவரை “நாய்”..”உன் நாட்டுக்கு போ” என்று இன ரீதியாக தாக்கிய ஆடவர் இறந்த நிலையில் கண்டெடுப்பு