உலகின் மிகச்சிறந்த விமான நிலையமாக சாங்கி விமான நிலையம் 12- வது முறையாக விருதை வென்று சாதனை!

Photo: Changi Airport

மார்ச் 15- ஆம் தேதி அன்று இங்கிலாந்து நாட்டின் லண்டனை தலைமை இடமாகக் கொண்ட ‘Skytrax’ நிறுவனம், ஆம்ஸ்டர்டாமில் நடத்திய விருது வழங்கும் நிகழ்ச்சியில், உலகின் மிகச்சிறந்த சர்வதேச விமான நிலையமாக சாங்கி விமான நிலையம் மீண்டும் தேர்வு செய்யப்பட்டு, விருது வழங்கி கௌரவித்தது.

சிங்கப்பூரில் மூத்த செய்தியாளர் எம்.கே.நாராயணன் காலமானார்!

குறிப்பாக, சிறந்த பொழுதுபோக்கு வசதிக்கான விருதையும், சிறந்த உணவகங்களைக் கொண்டிருப்பதற்கான விருதையும் சாங்கி விமான நிலையம் வென்றுள்ளது. இந்த விருதை 12- வது முறையாக வென்று சாங்கி விமான நிலையம் சாதனை படைத்துள்ளது.

‘லிஷா’ ஏற்பாடு செய்துள்ள லிட்டில் இந்தியாவின் பாரம்பரிய உணவுப் பயணம் நிகழ்ச்சியில் பங்கேற்க அழைப்பு!

உங்களின் ஆதரவும், எங்கள் விமான நிலைய சமூகத்தின் அர்ப்பணிப்பும் இல்லாமல் இந்த விருது கிடைத்திருக்காது என்று சாங்கி விமான நிலையம் தெரிவித்துள்ளது.