உலக சைக்கிள் தினத்தையொட்டி, சைக்கிள் பேரணியைத் தொடங்கி வைத்த இந்திய தூதர்!

Photo:High Commission of India in Singapore Official Facebook Page

உலகம் முழுவதும் இரு சக்கர வாகனங்கள் மற்றும் கார்களைப் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக, பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களில் பெரும்பாலானோர் சைக்கிள்களைத் தவிர்த்து இரு சக்கர வாகனங்களை அதிகம் பயன்படுத்தி வருகின்றன.

8 பேருக்கு வலைவீசி $27,000 சுருட்டிய பெண் – கண்டிப்பான சிங்கப்பூரில் இப்படியெல்லாம் நடக்குதா?

எனினும், சிங்கப்பூர் உள்ளிட்டப் பல்வேறு நாடுகளில் காலை மற்றும் மாலை வேளைகளில் இளைஞர்கள் முதல் முதியவர்கள் வரை சைக்கிளில் குறிப்பிட்ட தூரத்திற்கு சென்று வருகின்றனர். குறிப்பாக, சொல்லவேண்டுமென்றால் சிங்கப்பூர் அரசு சைக்கிளோட்டிகளுக்கென்று தனிப்பாதையை அமைத்துள்ளது. இது சைக்கிளோட்டிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது என்று கூறப்படுகிறது. மேலும், சைக்கிளோட்டிகள் பாதுகாப்புக்கான பயணத்தை மேற்கொள்ளவும், இது உதவுகிறது.

தினந்தோறும் சைக்கிளில் பயணம் செய்வதால், உடல் ஆரோக்கியம் மேம்பட்டு, உடல் புத்துணர்ச்சிப் பெறுகிறது. அதேபோல், உடல்நலம், சுற்றுச்சூழல் உள்ளிட்ட அனைத்திற்கும் ஏற்ற போக்குவரத்து முறை சைக்கிள் என்பதாலும், சைக்கிளிங் செல்பவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் வகையிலும் ஆண்டுதோறும் சைக்கிள் தினம் கொண்டாடப்படும் என்று ஐ.நா. பொதுச்சபையில் கடந்த 2018- ஆம் ஆண்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன் தொடர்ச்சியாக, ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 3- ஆம் தேதி அன்று சைக்கிள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.

காபி கடையில் இளைஞருக்கு சரமாரி வெட்டு… தப்பி ஓடியவரை வளைத்து பிடித்தது போலீஸ்!

இந்த உலக சைக்கிள் தினத்தில் அனைத்து நாடுகளும் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்து, சைக்கிள் பேரணி, சைக்கிளிங் செல்வதால் ஏற்படும் நன்மைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது.

அந்த வகையில், இன்று (03/06/2022) உலக சைக்கிள் தினத்தையொட்டியும், இந்தியாவின் 75- வது சுதந்திர தினக் கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாகவும், ‘Ride@75’ என்ற சைக்கிள் பேரணிக்கு சிங்கப்பூரில் உள்ள இந்திய தூதரகம் ஏற்பாடு செய்திருந்தது. இந்த பேரணியை இந்தியாவுக்கான சிங்கப்பூர் தூதர் குமரன் பெரியசாமி கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். இதில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை கலந்துக் கொண்டனர். இந்த தகவலை சிங்கப்பூரில் உள்ள இந்திய தூதரகம் தனது அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.