மிக விலையுயர்ந்த நகரங்கள் பட்டியலில் சிங்கப்பூருக்கு எத்தனையாவது இடம் தெரியுமா?- விரிவான தகவல்!

 

லைஃப்ஸ்டைல் இண்டக்ஸ் நிறுவனம் (Lifestyle Index), உலகில் ஆடம்பர வாழ்க்கைக்கு உகந்த மிக விலை உயர்ந்த நகரங்களுக்கான (Most Expensive Cities) தரவரிசைப் பட்டியலை வெளியிட்டுள்ளது. குடியிருப்புச் சொத்துகள், கார்கள், விமான பயணங்கள், வர்த்தகம் மற்றும் சுற்றுலாப் பயணிகளின் வருகை, ஆடம்பர வசதிகள் உள்ளிட்டவை அடிப்படையாகக் கொண்டு ஆய்வு நடத்தியிருந்தது.

கட்டுமான தளத்தில் விபத்து: கம்பியின் பகுதி, தொங்குமேடை இடிந்து விழுந்தது.. ஊழியருக்கு காயம்

அந்த வகையில், ஆடம்பர வாழ்க்கைக்கு உகந்த மிக விலை உயர்ந்த நகரங்களுக்கான பட்டியலில் சிங்கப்பூர் முதலிடத்தில் உள்ளது. சீனாவின் ஷாங்காய் நகரம் இரண்டாவது இடத்திலும், ஹாங்காங் மூன்றாவது இடத்திலும் உள்ளது. பிரிட்டன் தலைநகர் லண்டன் நான்காவது இடத்திலும், அமெரிக்காவின் நியூயார்க் நகரம் ஐந்தாவது இடத்திலும், மொனாகோ ஆறாவது இடத்திலும், துபாய் ஏழாவது இடத்திலும், தைவான் நாட்டின் தைபே எட்டாவது இடத்திலும், பிரேசில் நாட்டின் சா பாலோ நகரம் ஒன்பதாவது இடத்திலும் உள்ளது.

அமெரிக்கா நாட்டின் மியாமி நகரம் பத்தாவது இடத்திலும், தாய்லாந்து நாட்டின் பாங்காங் நகரம் 11வது இடத்திலும், இந்தோனேசியா நாட்டின் தலைநகர் ஜகார்த்தா 12வது இடத்திலும், பிரான்ஸ் நாட்டின் தலைநகர் பாரீஸ் 13வது இடத்திலும் உள்ளது.

தெம்பனீஸில் இறந்து கிடந்த 48 வயதுமிக்க ஆடவர் – இயற்கைக்கு மாறான மரணம்.. போலீஸ் விசாரணை

கடந்த 2022- ஆம் ஆண்டு இதே பட்டியலில் சிங்கப்பூர் ஐந்தாவது இடத்திலும், லண்டன் இரண்டாவது இடத்திலும், நியூயார்க் 11வது இடத்திலும் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.