மலேசியாவில் உலகத் தமிழர் ஆராய்ச்சி மாநாடு!

Wikipedia Image

11ஆவது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு மலேசியாவில் வரும் ஜூலை மாதம் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வட கொரியாவின் ஏவுகணை சோதனைகளுக்கு சிங்கப்பூர் கடுமையான கண்டனம்!

உலகத் தமிழ் ஆராய்ச்சி மன்றத்தால், கடந்த 1966- ஆம் ஆண்டு முதல் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு நடத்தப்பட்டு வருகிறது. இதுவரை, 10 உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடுகள் நடத்தப்பட்டுள்ள நிலையில், 11ஆவது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு நடத்தப்படவுள்ளது. உலகத் தமிழர்களை ஒருங்கிணைக்கவும், மொழி வளர்ச்சிக்காகவும் நடைபெறும் இந்த மாநாட்டில் 100- க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து சுமார் 2,500 தமிழறிஞர்கள் கலந்துக் கொள்ள உள்ளனர்.

தமிழ்நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களுடன் இணைந்து மூன்று நாட்கள் இந்த மாநாடு நடைபெறவுள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவிருந்த இந்த மாநாடு, நிர்வாக காரணங்களுக்காக மலேசியாவுக்கு மாற்றப்பட்டுள்ளது. அதன்படி, மாநாடு வரும் ஜூலை மாதம் 21- ஆம் தேதி முதல் 23- ஆம் தேதி வரை மலேசியா பல்கலைக்கழகத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

போலி ATM கார்டுகளை தயாரித்து, அதனை பணம் எடுக்க பயன்படுத்திய நபர் கைது

இந்த ஆராய்ச்சி மாநாடு தனியார் சார்பில் நடத்தப்படுவதாகவும், தமிழ்நாடு அரசுக்கும், இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லையென தமிழ் வளர்ச்சித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.