உலகின் பரபரப்பான விமான நிலையங்களின் பட்டியலில் சாங்கி ஏர்போர்ட் 9வது இடம் – முதல் இடம் எது தெரியுமா?

(Photo: ET)

உலகின் பரபரப்பான விமான நிலையங்களின் பட்டியலில் முதல் 10 இடங்களுக்குள் வந்து சாங்கி விமான நிலையம் சாதனை படைத்துள்ளது.

பரபரப்பான விமான நிலையங்களின் வரிசையில் சாங்கி விமான நிலையம் 9 வது இடத்தை பிடித்துள்ளது. முதல் பத்தில் இடம்பெற்ற ஒரே ஒரு ஆசிய விமான நிலையம் இது மட்டும் தான்.

விமானப் பயணத் தேவை அதிகரித்து வரும் நிலையில், 2022 ஆம் ஆண்டில் பரபரப்பான விமான நிலையம் குறித்த பட்டியல் வெளியானது.

கடந்த புதன்கிழமை ஏர்போர்ட்ஸ் கவுன்சில் இன்டர்நேஷனல் (ஏசிஐ) வெளியிட்ட உலகத்தின் தரவரிசையின்படி, கடந்த ஆண்டில் மட்டும் மொத்தம் 31.9 மில்லியன் பயணிகள் சாங்கி விமான நிலையத்துக்கு வந்து சென்றுள்ளனர்.

துபாய் சர்வதேச விமான நிலையம் 66 மில்லியன் சர்வதேச பயணிகளுடன் முதலிடத்திலும், லண்டன் ஹீத்ரோ விமான நிலையம் 58.2 மில்லியன் பயணிகளுடனும், ஆம்ஸ்டர்டாம் விமான நிலையம் ஷிபோல் 52.5 மில்லியனுடனும் அடுத்தடுத்த இடத்தை பிடித்துள்ளன.