உலகிலேயே வளர்ப்பு கோழி இறைச்சிக்கு ஒப்புதல் அளித்த முதல் நாடு எது தெரியுமா? – ஆசியாவிலேயே மிகப்பெரிய கோழி வளர்ப்பு ஆய்வகம்

chicken

மலேசியா ஜூன் மாத தொடக்கத்தில் இருந்து கோழி ஏற்றுமதி தடையை அறிவித்ததில் இருந்து சிங்கப்பூரின் கோழி விநியோகங்கள் முழுமையாக பாதிப்படைந்தன. இந்நிலையில் சிங்கப்பூர் ஆசியாவிலேயே முதன்முறையாக ஆய்வகத்தில் வளர்க்கப்படும் கோழி இறைச்சியை உற்பத்தி செய்யும் வசதியை உருவாக்க உள்ளது.

கோழி வளர்ப்பு செல்களிலிருந்து பல்லாயிரக்கணக்கான பவுண்டுகள் எடையுள்ள இறைச்சியை ஆய்வகத்தில் உற்பத்தி செய்ய முடியும்.சுமார் 30,000 சதுர அடி பரப்பில் 2023 ஆம் ஆண்டில் திறக்கப்படும் என்று தகவல்கள் கூறுகின்றன. இந்த வசதியில் 50 ஆராய்ச்சியாளர்கள்,பொறியாளர்கள் மற்றும் விஞ்ஞானிகள் இந்த உற்பத்தி வசதியில் பணியாற்ற இருக்கிறார்கள்.

S$61 மில்லியன் வசதியில் JTC Bedok Food City-ல் அமைக்கப்பட உள்ளது. உணவு பாதுகாப்பை வலுப்படுத்துதல் நிகழ்வில் கலந்துகொண்ட சிங்கப்பூரின் நிலைத்தன்மை மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சர் Grace Fu உள்ளூர் உணவு உற்பத்தியை அதிகரிக்கவும்,சிங்கப்பூரின் உணவு பாதுகாப்பை பின்னடைவில் இருந்து மேம்படுத்தவும் இந்த ஆய்வக உற்பத்தி வசதி உதவும் என்று விளக்கினார்.

சிங்கப்பூர் தனது சொந்த உணவு உற்பத்தியை 2030-ஆம் ஆண்டிற்குள் 30 விழுக்காடு அதிகரித்திருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் பிற நாடுகளின் இறக்குமதியை சார்ந்திருக்க வேண்டிய அவசியமில்லை. Good Meat’s சிக்கனுடன் வளர்ப்பு கோழி இறைச்சி விற்பனைக்கு ஒப்புதல் அளித்த உலகின் முதல் நாடு சிங்கப்பூர் ஆகும்.