சிங்கப்பூரில் மீண்டும் முகக்கவசம், கட்டுப்பாடா? – சுகாதார அமைச்சர் சொல்வதென்ன?

ஊழியர் விளையாட்டாக செய்த காரியம் அவருக்கே வினையாய் போனது - சிறை விதிப்பு
(PHOTO: Mothership)

சிங்கப்பூர் சில COVID-19 கட்டுப்பாடுகளை மீண்டும் கொண்டு வருவதை முற்றிலுமாக நிராகரிக்கவில்லை என்பதை சுகாதார அமைச்சர் ஓங் யீ குங் இன்று (அக். 15) சுட்டிக்காட்டியுள்ளார்

ஆனால், அது மக்களின் இயல்பு வாழ்க்கையை பாதிக்காமல் இருக்கும் வகையில் அந்த முடிவுகளை எடுப்பது பற்றியும் அவர் தெரிவித்தார்.

புதிய ஓமிக்ரான் திரிபு வகை மற்றும் மறுநோய் பரவல் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக சுகாதார அமைச்சகத்தின் (MOH) செய்தியாளர் கூட்டத்தில் அவர் கூறினார்.

அமைச்சகம் தொற்றுப்பரவல் சூழலை உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறது என்றும், மேலும் முகக்கவசம் அணிவது போன்ற பாதுகாப்பு மேலாண்மை நடவடிக்கைகளை (SMM) மீண்டும் நடைமுறைப்படுத்துவதின் சாத்தியம் குறித்தும் அவர் விளக்கினார்.

ஆனால் இந்த பாதுகாப்பு நடவடிக்கைகள் இல்லாமல் சிங்கப்பூர் தற்போது மற்றொரு கிருமி பரவலை சந்தித்து வருவதை அவர் சுட்டிக்காட்டினார்.

ஓமிக்ரான் XBB வகை கிருமியின் பரவலைப் பொறுத்தே முகக்கவசம் போன்ற பாதுகாப்பு முடிவுகள் அமையும் என சுகாதார அமைச்சர் மேற்கோள்காட்டினார்.