தியோங் பாருவின் பிரபலமான கடையை மூடவிருக்கும் வயதான தம்பதியினர் – ரகசிய செய்முறையை S$500,000க்கும் விற்கத் தயார் !

Tiong Bahru's Xian Ji Porridge

தியோங் பாருவின் பிரபலமான Xian Ji Porridge கடை  ஆகஸ்ட் 2022 இறுதிக்குள் மூடப்படவுள்ளது. சீன வாட்டர்கெஸ், மீன் மற்றும் துண்டு துண்டாக வெட்டப்பட்ட மீட்பால்ஸ் போன்ற பொருட்களை உள்ளடக்கிய கான்டோனீஸ் பாணி உணவு வகைக்கு இந்த கடை மிகவும் பிரபலமானது.

1989 முதல் திரு மற்றும் திருமதி சூன் ஆல் இயக்கப்பட்டு வந்த இந்த கடை 33 ஆண்டுகளுக்கு பிறகு மூடப்படவுள்ளது. அவர்களின் இந்த முடிவு அனைத்து தரப்பினருக்கும் கடினமாக இருந்தது என்றும் திருமதி சூன் கூறியுள்ளார்.

தியோங் பாருவில் இந்த தம்பதியினர் இயக்கி வந்த அந்த கடையை மூடிய பிறகு, அவர்கள் வேறு இடத்தில் மீண்டும் திறக்கலாம் என்றும் கூறியுள்ளனர். ஆனாலும் வாடகை விலைகள் அதிகரித்து வருவதால், இந்த முடிவு இன்னும் உறுதி ஆகவில்லை என்றும் கூறியுள்ளனர்.

மேலும் இவர்களின் ரகசிய கஞ்சி செய்முறையை S$500,000க்கு விற்கத் தயாராக இருப்பதாகவும் திருமதி சூன் கூறியுள்ளார். இந்த விலை பேச்சுவார்த்தைக்குட்பட்டது என்றும், அவர்களின் பாரம்பரியத்தைத் தொடர ஒருவர் இருக்கிறார் என்பதும் மிக முக்கியமான விஷயம் என்றும் கூறியுள்ளார்.

 

கடை விவரங்கள் :

Xian Ji Porridge

முகவரி: 57 Eng Hoon St, சிங்கப்பூர் – 160057

திறக்கும் நேரம்: காலை 7.00 – 9:30, செவ்வாய் முதல் ஞாயிறு வரை