இந்த Video பார்த்த உடனே சிலிர்த்துவிட்டது: சிங்கப்பூர் லிட்டில் இந்தியாவில் அழகு தமிழில் பேசும் சீன வாலிபர்!

14 ஆண்டுக்கு முன்பு சிங்கப்பூர் வந்தபோது தமிழ் என்றாலே என்னவென்று தெரியாது. இப்போது வாடிக்கையாளர்களுடன் சரளமாகத் தமிழில் கலந்துரையாடும் அளவுக்கு மாறி இருக்கிறார்.

சீ டோங் (Xie Dong) என்ற சீனா வாலிபர் லிட்டில் இந்தியாவில் உள்ள பூக்கடையில் பணிபுரிகிறார். தினமும் 50 பூமாலை கட்டும் அளவுக்கு திறமையானவர்.

14 ஆண்டுக்கு முன் சீனாவிலிருந்து சிங்கப்பூருக்கு வந்த அவர், அப்போதிருந்தே லிட்டில் இந்தியா பூக்கடையில் பணிபுரிந்து வருகிறார்.

ஆரம்பத்தில் தமிழில் ஒரு வார்த்தைகூடத் தெரியாது. கைகளைக் காட்டிக்கொண்டு  வாடிக்கையாளர்களுடன் உரையாடுவார்.

இருப்பினும் சீ டோங் இத்தனை ஆண்டுகாலம் பூக்கடையில் நீடித்ததற்கு அவரின் உழைப்பும் விடாமுயற்சியுமே காரணம் என கடை உரிமையாளர் கூறுகிறார்.

சிங்கப்பூரில் உள்ள வெளிநாட்டு ஊழியர்களின் கதைகளை மனிதவள அமைச்சகம் பகிர்ந்து வருகிறது.

அதில் சீ டோங்கின் கதை குறித்த வீடியோவை  பகிர்ந்துகொண்டுள்ளது.

வீடியோ: https://www.facebook.com/watch/?v=1010677719617858