2022 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் : பேட்மிண்டன் மகளிர் ஒற்றையர் பிரிவில் சிங்கபூருக்கு வெண்கலம் !

Badminton bronze commonwealth

பர்மிங்காமில் நடைபெற்று வரும் 2022 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியின் பேட்மிண்டன் பெண்கள் ஒற்றையர் பிரிவில் ஸ்காட்லாந்தின் கிர்ஸ்டி கில்மோரை வீழ்த்தி சிங்கப்பூர் வீராங்கனை யோ ஜியா மின் வெண்கலம் வென்றார்.

உலகின் 19-வது இடத்தில் இருக்கும் யோ, உலகின் 17-வது இடத்தில் இருக்கும் கில்மோரை 21-14, 22-20 என்ற செட் கணக்கில் வீழ்த்தினார்.

23 வயதான யோ வெண்கலம் வென்றது, 2002ல் சிங்கப்பூருக்காக லீ லி தங்கம் வென்ற பிறகு சிங்கப்பூர் பேட்மிண்டனில் பெறும் முதல் பதக்கம் ஆகும். ஆக, 20 வருடங்களுக்கு பிறகு பேட்மிண்டனில் பதக்கம் பெற்றுத்தந்துள்ளார் யோ.

முன்னதாக ஞாயிற்றுக்கிழமை நடந்த அரையிறுதி ஆட்டத்தில் யோ 19-21, 17-21 என்ற செட் கணக்கில் உலகத்தரவரிசையில் ஏழாம்(7) இடத்தில் உள்ள வீராங்கனையான பிவி சிந்துவிடம் தோல்வியடைந்தது குறிப்பிடத்தக்கது.