கடந்த மாதங்களாக குடியிருப்புகளில் திடீரென தாக்கும் உலோக பேரிங் மணிகள் – தயாராக இருக்கும் போலீஸ்

yishun-metal-bearing hit
Shin Min Daily/FB

சிங்கப்பூர் யுஷுன் குடியிருப்பு வீடுகளில் உலோக பேரிங் மணிகள் தாக்குவதாக கூறப்பட்டுள்ளது.

கடந்த ஒன்பது மாதங்களில் குறைந்தபட்சம் 10 வீடுகளில் இதுபோன்ற உலோக மணிகள் தாக்கியதாக கூறப்படுகிறது.

தடுப்பூசி போட்டுக்கொண்ட “இந்திய பயணிகளுக்கு தனிமை இல்லா” பயணம் – விமான சேவை குறித்த முழுமையான விவரம்!

அது தாக்கியதில் வீட்டின் கண்ணாடி கதவுகள் மற்றும் ஜன்னல்கள் சேதமடைந்தன. அதாவது ஒரு சம்பவத்தில், சேதத்தை சரிசெய்ய சுமார் S$900 செலவாகும் என்றும் மதிப்பிடப்பட்டது.

இதனால் பாதிக்கப்பட்ட மக்கள் பலர் காவல்துறையில் இதுபற்றி புகார் அளித்துள்ளனர். இது தொடர்பாக புகார்களை பெற்ற போலீசார் தற்போது விசாரணை நடத்தி வருகின்றனர்.

காவல்துறையினருடன் நெருக்கமாகச் செயல்பட்டு வருவதாகவும், ஏதேனும் இந்த மாதிரியான சம்பவம் நடந்தால் உடனடியாக போலீசுக்கு புகார் அளிக்குமாறு குடியிருப்பாளர்களை வலியுறுத்தினார் MP இங்.

இதுபற்றி தகவல் தெரிந்தால் 1800-255-0000 என்ற போலீஸ் ஹாட்லைன் எண்ணை அழைக்கலாம் அல்லது இணையதளத்தில் தகவல்களைச் சமர்ப்பிக்கலாம்.

இந்திய பயணிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி! – இந்தியாவின் அனைத்து நகரங்களில் இருந்தும் சிங்கப்பூருக்கு தனிமை இல்லா சேவை!