பொது இடத்தில் பெண்ணை தாக்கிய காட்டுப்பன்றி… தேடிவரும் அதிகாரிகள் – அச்சத்தில் மக்கள்!

Carrie Tan's Facebook and Shin Min Daily News

யுஷூனில் அமைந்துள்ள திறந்தவெளி பிளாசாவில் பெண் ஒருவரை தாக்கிய காட்டுப்பன்றியை அதிகாரிகள் தேடி வருகின்றனர்.

Blk 844 யுஷுன் ஸ்ட்ரீட் 81க்கு அருகிலுள்ள பிளாசாவில் பொதுவாக மக்கள் கூட்டம் அதிகம் காணப்படும், இதனால் இந்தச் சம்பவம் பொதுமக்களுக்கு அச்சம் மற்றும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

காயங்களுடன் சாலையில் கிடந்த பெண்… நாசம் செய்தவர்களை CCTV மூலம் அடையாளம் கண்ட போலீஸ் – 12 மணி நேரத்திற்குள் கைது

அந்த காட்டுப்பன்றி, நீண்ட தந்தம் கொண்ட ஆண் இனம் என கண்ணால் கண்டவர்கள் கூறியதாக mothership குறிப்பிட்டுள்ளது.

இந்த சம்பவம் அதிர்ச்சியளிப்பதாக நீ சூன் ஜிஆர்சி MP கேரி டான் கூறினார், மேலும் காட்டுப்பன்றியை கண்டுபிடிக்க நகர மன்றம் அதிக ஊழியர்களுடன் உடனடியாக களத்தில் இறங்கியதாகவும் தெரிவித்தார்.

மேலும், காயமடைந்த நபர் விரைவில் குணமடைய பிராத்திப்பதாகவும் அவர் கூறினார்.

NParks அதிகாரிகள் காட்டுப்பன்றியைக் கண்டுபிடிக்க யுஷுன் பூங்காவை மூடியதாகவும் கூறப்பட்டுள்ளது.

வெளிநாட்டு ஊழியர்களை ஏற்றிச் செல்லும் லாரிகளில் இனி இதெல்லாம் “கட்டாயம்” – அதிரடி அறிவிப்பு