சாங்கி விமான நிலையத்தில் விமான பணிப்பெண் சீருடை அணிந்து வந்த குட்டி தேவதை – புன்னகைத்த ஊழியர்கள்

Young girl SIA cabin crew
@charmmy3030/TikTok

சாங்கி விமான நிலையத்தில் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் (SIA) சீருடை அணிந்த குட்டி பெண் தேவதை சமீபத்தில் விமான ஊழியர்கள் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.

தனது மகளுக்கு சீருடை அணிவித்த @charmmy3030 என்ற TikTok பயனர் ஒருவர், விமான நிலைய பகுதியில் அந்த சிறுமி சக ஊழியர்களை வரவேற்கும் வீடியோ ஒன்றையும் வெளியிட்டார்.

“சாப்டனும் காசு தாங்க” – வெளிநாட்டு வேலையாட்களை குறித்து வைத்து பணம் கேட்கும் பெண் – வளைத்து பிடித்த போலீஸ்

அந்த ‘குட்டி விமானப் பணிப்பெண்’, மற்ற பணிப்பெண்களை கை அசைத்து வரவேற்றார்.

விமான கேப்டன் உட்பட பலர் குட்டி பணிப்பெண்ணை கண்டு மகிழ்ச்சியில் கைசைத்து புன்னகையுடன் சென்றனர்.

விமான பணிப்பெண்ணின் மகள் அவ்வளவு அழகாக இருக்கிறார் என்று பல நெட்டிசன்கள் கருத்து தெரிவித்தனர்.

குழந்தை என்றாலே அழகு தான், அதுவும் பெண் குழந்தை என்றால் அது தேவதை போன்றது.

விரும்பிய போட்டோவை வெறும் S$0.50 க்கு பிரிண்ட் எடுக்கலாம் – IKEA அலெக்ஸாண்ட்ரா அமைத்துள்ள சுவர் போட்டோபூத்