பாலியல் சேவைக்கு பணம்… சிக்கிய யூடியூபர் – சிறையில் அடைத்த சிங்கப்பூர்

பல்வேறு பாலியல் குற்றங்களைச் செய்த யூடியூபர் டேரில் இயன் கோஷி என்பவருக்கு 32 வாரங்கள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

அவர், 18 வயதுக்குட்பட்ட சிறுவனிடம் பாலியல் சேவை தொடர்பாக பணம் கொடுத்தது உட்பட குற்றங்களை செய்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

தந்தைக்கு ஆதரவாக மற்றொரு நபரை தாக்கிய ஆடவர்; உதிரம் சொட்ட சொட்ட சண்டை

டீ கோஷ் (Dee Kosh) என்று அழைக்கப்படும் 33 வயதான அவருக்கு நேற்று வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 5) சிறைத் தண்டனையை விதிக்கப்பட்டது.

மைனர் ஒருவருக்கு பாலியல் சேவைக்காக பணம் வழங்கியதாக ஒரு குற்றச்சாட்டையும், பாலியல் ரீதியாக தவறாக நடந்துகொள்ள முயற்சித்ததற்காக குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் சட்டத்தின் கீழ் மற்றொரு குற்றச்சாட்டையும் அவர் ஒப்புக்கொண்டார்.

2016 அல்லது 2017 ஆம் ஆண்டில் 23 மற்றும் 25 வயதுடைய ஆடவர்களுடன் பாலியல் செயல்களில் ஈடுபட்டு தன்னை தானே படமெடுத்துக்கொண்ட குற்றத்தையும் அவர் ஒப்புக்கொண்டார்.

மற்ற நான்கு குற்றச்சாட்டுகள் கவனத்தில் கொள்ளப்பட்டன.

சிங்கப்பூரில் குரங்கம்மையால் புதிதாக பாதிக்கப்பட்ட ஆடவர்… மற்றொரு நோயாளியுடன் தொடர்பு – MOH ரிப்போர்ட்