Coachella தயாரிப்பாளர்களுடன் ZoukOut-2022ற்கு இணையும் Zouk குழுமம் – ஸ்டேஜ் சும்மா பத்திக்க போது பாருங்க !

zoukout 2022

ZoukOut 2022 நிகழ்ச்சிக்கு Coachella தயாரிப்பாளர்களுடன் Zouk இணைந்துள்ளது. நீங்கள் இதுவரை கேள்விப்பட்டதில்லை என்றால், மூன்று வருட இடைவெளிக்குப் பிறகு, டிசம்பர் 2 மற்றும் 3, 2022 அன்று ZoukOut, Siloso கடற்கரையில் மீண்டும் நடக்கவுள்ளது.

நேற்று ஜூலை 21 அன்று  ZoukOut இந்த ஆண்டு விழாவின் “தீம்”ஐ அறிவித்துள்ளது – இந்த ஆண்டிற்கான தீம் “எதிர்கால நகரம்” (The Futuristic City of Dreams). முந்தைய ஆண்டுகளைப் போலவே, இந்த நடன இசைத்திருவிழா சர்வதேச மற்றும் உள்ளூர் திறமைகளைக் காணும் என்றும் 30,000 பேர் வரை கூடுவார்கள் என்றும் நம்பப்படுகிறது.

இந்த 2022இன் ZoukOut பதிப்பிற்காக, Coachellaவின் தயாரிப்பாளர்களான AEG உடன் Zouk குழுமம் இணைந்துள்ளது. மேலும் உலகப் புகழ்பெற்ற AEG உடன் இணைவதால், சர்வதேச விழா அனுபவத்தைக் கொடுக்கும் என்றும்  இதனால் ZoukOut ஐ இன்னொரு நிலைக்கு கொண்டு செல்ல முடியும் என்றும் Zouk குழுமத்தின் CEO ஆண்ட்ரூ லி தெரிவித்துள்ளார்.

ஆசியாவின் மிக நீண்ட நடன விழாவை மீண்டும் கொண்டு வர Zouk குழுமத்துடன் இணைந்ததில் AEG பெருமகிழ்ச்சியடைகிறது என AEGயின் தலைவர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி ஆடம் வில்க்ஸ் கூறியுள்ளார். மேலும் ZoukOutஇன் இரண்டு இரவுகளில் மறக்க முடியாத பொழுதுபோக்கு மற்றும் உலகத்தரம் வாய்ந்த DJக்களுடன் சிங்கப்பூரின் மிக அழகான இடத்தில் ஒரு அற்புதமான அனுபவத்தை பெறுவீர்கள் என்றும் கூறியுள்ளார்.