மீண்டும் வருகிறது நடன இசைத் திருவிழாவான ZoukOut – 30,000 பேர் வரை கூடலாம் என கணிப்பு !

zouk out celeb

கடந்த மூன்று வருடம் நிகழாமல் போன நிலையில், விடிய விடிய நடக்கும்  கடற்கரை நடனத் திருவிழாவான ZoukOut, இந்த டிசம்பரில் மீண்டும் சிங்கப்பூருக்கு வருகிறது. டிசம்பர் 2 மற்றும் 3, 2022 ஆகிய இரண்டு நாட்கள் Siloso Beach இல் நடைபெறும் இந்த ZoukOut நடன இசை விழா, இதன் 19வது பதிப்பாகும்.

 

ZoukOut மொத்தம் 12 மணி நேரத்திற்கும் மேலாக நடக்க உள்ளது, இரண்டு நாள் திருவிழாவின் கடைசி நாளில் இரவு ஆரம்பித்து காலை 8 மணிக்கு மட்டுமே முடிவடையும் என்று ZoukOut இன் அதிகாரப்பூர்வ பேஸ்புக் பக்கம் அறிவித்துள்ளது. பார்வையாளர்கள் மொத்தம் 30,000 பேர் வரை வருவார்கள் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது. அதற்கான டிக்கெட் விலை மற்றும் நிகழ்ச்சி பற்றிய விவரங்கள் இன்னும் அறிவிக்கப்படவில்லை.

 

கூடுதல் தகவல்களைப் பெற ஆர்வமுள்ளவர்கள் ZoukOut இன் அதிகாரப்பூர்வ வலைத்தளம் மற்றும் சமூக ஊடக கணக்குகளை பார்த்து அப்டேட்களை பெற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.