இஸ்தான்புல் விமான விபத்தில் மூன்று பேர் உயிரிழப்பு மற்றும் 179 பேர் காயம்..!

Turkish Plane accident
3 Dead After Turkish Plane Skids Off Runway, Splits Into Pieces

இஸ்தான்புல்லில் விமானம் ஒன்று தரையிறங்கும் போது ஏற்பட்ட விபத்தில் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 179 பேர் காயமடைந்துள்ளனர்.

துருக்கியில் இருக்கும் இஸ்மிர் விமான நிலையத்தில் இருந்து இஸ்தான்புல்லில் உள்ள சபீனா விமான நிலையம் நோக்கி இன்று அதிகாலை பேகாசஸ் விமானம் (Pegasus Airlines) புறப்பட்டுள்ளது. காலை 6.30 மணி அளவில் அந்த விமானம் சபீனா விமான நிலையத்திற்கு வந்துள்ளது.

இதையும் படிங்க : நடுவானில் பறந்துகொண்டிருந்த விமானத்தில் பிறந்த குழந்தை..!

ஆனால் இஸ்தான்புல்லில் இன்று மோசமான வானிலை நிலவியது. இரவு முழுக்க பெய்த மழை காரணமாக அங்கு ஓடுதளம் மிகவும் ஈரமாக காணப்பட்டது.

மேலும், வானமும் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. இந்நிலையில் அந்த பேகாசஸ் விமானம் தரையிறங்கும் நேரத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக கட்டுப்பாட்டை இழந்தது.

இதனால் விமானம் தரையில் மிக வேகமாக மோதியது, இதில் விமானம் மூன்றாக உடைந்ததுடன் விமானத்தின் வால் பகுதி தீ பிடித்து ஏறிய தொடங்கியது.

இதனை அடுத்து, தீயணைப்பு வீரர்கள் விரைந்து தீயை அணைத்தனர். மேலும், காயமடைந்தோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

“இந்த விபத்தில் மூன்று துருக்கியர்கள் உயிரிழந்தனர் மற்றும் 179 பேர் காயமடைந்தனர்” என்று துருக்கி சுகாதார அமைச்சர் பஹ்ரெடின் கோகா செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

இதில் விமானிகள் இருவரின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. விபத்தை தொடர்ந்து, அந்த விமான நிலையத்துக்கு வரவேண்டிய விமானங்கள் மற்ற விமான நிலையங்களுக்குத் திருப்பிவிடப்பட்டன.