அர்ஜென்டினா கால்பந்து அணிக்கு எதிராக வலுக்கும் விசாரணை – FIFA உறுதி

fifa-investigate-argentina
Emiliano Martinez & Getty

அர்ஜென்டினா கால்பந்து அணியின் நடவடிக்கைகள் குறித்த விசாரணையைத் தொடங்குவதாக FIFA உறுதிப்படுத்தி கூறியுள்ளது.

2022 FIFA உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் அர்ஜென்டினா அணி பெனால்டி கிக் மூலம் பிரான்ஸ் அணியை வீழ்த்தி வெற்றிவாகை சூட்டியது.

கட்டிடத்தின் விளிம்பில் வண்ணம் பூசிக் கொண்டிருந்த வெளிநாட்டு ஊழியர் – தடுமாறி கீழே விழுந்து மரணம்

வெற்றிபெற்ற பின்னர் அந்த அணியின் வீரர்கள் மற்றும் ஊழியர்களின் செயல்கள் அனைவரும் முகம் சுளிக்கும் வண்ணம் இருந்தது.

குறிப்பாக, அர்ஜென்டினா கோல்கீப்பர் எமிலியானோ மார்டினெஸ் வென்ற கோல்டன் க்ளோவ் விருதை அவர் முகம் சுளிக்கும் படி தன் உடல் பகுதியில் வைத்து கொண்டாடினார்.

போட்டியில் வென்ற பின்னர் பிரஞ்சு ரசிகர்களுக்கு எதிராக அவர் அந்த செய்கையை செய்ததாக கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில், போட்டியின் போதும் அதற்குப் பின்னரும் ஒழுங்குக் குறியீட்டின் விதிகளை அர்ஜென்டினா மீறியது குறித்து FIFA விசாரித்து வருகிறது.

அர்ஜென்டினா தங்கள் நாட்டு மக்களுடன் வெற்றியைக் கொண்டாடியபோது, ​​மார்டினெஸ் கேலி செய்யும் பொம்மை ஒன்றை வைத்திருந்தார். அதில் பிரான்ஸ் அணியின் ஸ்டார் வீரர் எம்பாப்பேயின் முகம் பொருத்தப்பட்டு இருந்ததும் குறிப்பிடத்தக்கது.

வீடியோ கேம் போன்று பறந்துவந்து மோதிய கார்: ஒருவர் மரணம் – பேருந்து பயணி 7 பேர் மருத்துவமனையில்..