விளையாட்டு செய்திகள்

இந்தியா – வங்கதேசம் அணிகள் மோதும் டி20 கிரிக்கெட் போட்டி இன்று தொடக்கம்..!!

IND vs BAN, 1st T20 Match

இந்தியா – வங்கதேசத்துடன் 3 ஆட்டங்கள் கொண்ட 20 ஓவர் போட்டி விளையாடவுள்ளது. இதன் முதல் ஆட்டம் புது தில்லி அருண்ஜேட்லி மைதானத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு நடைபெறுகிறது.

இந்திய அணி இளம் வீரா்கள் வங்கதேசத்துக்கு எதிராக டி20 தொடரை கைப்பற்றும் முனைப்பில் தீவிரமாக உள்ளனர். வரும் 2020-ஆம் ஆண்டில் ஆஸ்திரேலியாவில் ஐசிசி டி20 உலகக் கோப்பை போட்டிகள் நடைபெறவுள்ளன. இதற்காக நடப்பு சாம்பியன் மே.இ.தீவுகள் உள்பட பல்வேறு அணிகள் தங்களை தயார்படுத்தி வருகின்றனர்.

இந்தியா-வங்கதேச அணிகள் இதுவரை 8 டி20 ஆட்டங்களில் நேருக்கு நேர் மோதியுள்ளன. அதில் இந்தியாவே 8-இலும் வென்றுள்ளது. ஒரு ஆட்டத்தில் கூட வங்கதேசம் வெல்லவில்லை. அதன் காரணமாக இந்த தொடரில் சற்று விறுவிறுப்பு அதிகம் இருக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

சிங்கப்பூரில் கீழே குறிப்பிட்டுள்ள டிவி சேனலில் இந்த ஆட்டத்தை பார்க்கலாம்.

Star Hub Channel No : 236, 237

Singtel Channel No. : 123, 124

Related posts