டெஸ்ட் போட்டியில் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தி வேகப்பந்து வீச்சாளர் பும்ரா சாதனை!

Jasprit Bumrah bags hattrick for India against West Indies

டெஸ்ட் போட்டியில் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தி இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா சாதனை படைத்துள்ளார்.

இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி ஜமைக்காவில் உள்ள கிங்ஸ்டன் நகரில் நடந்து வருகிறது. இதில் இரண்டாம் நாள் ஆட்டத்தை இந்திய அணி 264 ரன்களுக்கு 5 விக்கெட் என்ற நிலையில் ஆடத்தொடங்கியது.

இதில் சிறப்பாக விளையாடிய ஹனுமன் விகாரி சதம் விளாசினார். அவருடன் சிறப்பாக துணை நின்று ஆடிய இசாந்த் சர்மா அரைசதம் எடுத்தார். இறுதியாக இந்திய அணி 416 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

இதனையடுத்து, பந்து வீச தொடங்கிய இந்திய அணி சிறப்பான முறையில் தன்னுடைய பந்துவீச்சை தொடங்கியது. இதில் ஜஸ்பிரித் பும்ரா தொடர்ந்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்தார். அவர் பிராவோ ப்ரூக்ஸ் மற்றும் சேஸ் ஆகியோரின் விக்கெட்டுகளை அடுத்தடுத்து வீழ்த்தி ஹாட்ரிக் சாதனையை நிகழ்த்தினார்.

இதற்கு முன் இந்த ஹாட்ரிக் சாதனையை இந்தியாவின் ஹர்பஜன்சிங், இர்பான் பதான் ஆகியோர் டெஸ்ட் கிரிக்கெட்டில் வீழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

நேற்றைய ஆட்ட நேர முடிவில் வெஸ்ட் இண்டீஸ் 7 விக்கெட் இழப்பிற்கு 87 ரன்கள் எடுத்திருந்தது.