ஜாலன் புக்கிட் மேராவில் தகராறு, வெட்டுக்கத்தியால் தாக்கிய கொடூரம் !

116 bukit merah

ஜாலன் புக்கிட் மேராவில் ஏற்பட்ட தகராறில் 28 வயது நபர் ஒருவர் கத்தியால் 27 வயது இளைஞரின் கைகளையும் கால்களையும் கொடூரமாக வெட்டியுள்ளார். ஜூலை 14, வியாழன் அன்று இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது.

மாலை 4 மணியளவில் சண்டை குறித்த பல எச்சரிக்கை அழைப்புகளுக்கு போலீசார்  பதிலளித்ததாக கூறியுள்ளனர். ஜாலன் புக்கிட் மேராவின் பிளாக் 116 இரத்த ஆறாக காணப்பட்டது. முதற்கட்ட விசாரணையில், தாக்குதல் நடத்தியவர் தகராறில் ஈடுபட்டது கண்டறியப்பட்டது. அவரை வெட்டுவதற்கு வெட்டுக்கத்தியை பயன்படுத்தியுள்ளார் என்றும் பாதிக்கப்பட்டவர் சுயநினைவுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார் என்றும் கூறப்பட்டுள்ளது. தாக்குதல் நடத்தியவர் சம்பவ இடத்தில் கைது செய்யப்பட்டு ஆபத்தான ஆயுதத்தால் தானாக முன்வந்து கடுமையான காயத்தை ஏற்படுத்தியதற்காக அவர் மீது ஜூலை 15 வெள்ளிக்கிழமை குற்றம் சாட்டப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. குற்றம் நிரூபிக்கப்பட்டால் 15 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை மற்றும் அபராதம் அல்லது பிரம்படி விதிக்கப்படலாம்.

முன்னதாக ஜூன் 29 அன்று, ஜாலன் புக்கிட் மேராவின் பிளாக் 111 இல் 50 வயது நபர் ஒருவர் கைது செய்யப்பட்டார், அவர் மற்றொரு நபரின் தலையை கத்தியால் வெட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.