உலகின் பழமைவாய்ந்த “தமிழ்” மொழியில் நன்றி கூறிய ஜெர்மனி கால்பந்து கிளப்..!

FC Bayern München posting thank you card in Tamil language

ஜெர்மன் கால்பந்து கிளப், FC Bayern München உலகளாவிய தனது கால்பந்து ரசிகர்களுக்கு அவரவர் மொழிகளில் நன்றி கூறியுள்ளது. இதனை தனது முகநூல் பக்கத்தில் அது பதிவு செய்துள்ளது.

பல்வேறு நாடுகளில் உள்ள தனது ரசிகர்களுக்கு, அவரவர் மொழிகளில் சுமார் 100க்கும் மேற்பட்ட நாடுகளை டேக் செய்து தனது நன்றியை கூறியுள்ளது.

இந்நிலையில், FC Bayern München இந்தியாவின் தமிழ் மொழியிலும் நன்றி கூறியுள்ளது. இது தமிழ் கால்பந்து ரசிகர்கள் மட்டுமல்லாமல் அனைத்து தமிழர்களையும் பெருமையடைய செய்துள்ளது.

மேலும், இந்தியாவின் பல மொழிகளில் தனது நன்றியை பதிவு செய்துள்ளது, ஆனால் தமிழ் மொழிக்கு மட்டும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த தமிழ் பதிவை சமூக வலைத்தளங்களில் பலர் பகிர்ந்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.