சிங்கப்பூருக்கு வர்றீங்களா? – மொதல்ல இத தெரிஞ்சுக்கோங்க! இதெல்லாம் கொண்டுவர அனுமதி கிடையாது!

public holiday Singapore 2024
வெளிநாடுகளில் இருந்து கல்வி,மருத்துவம்,தொழில் மற்றும் வேலைவாய்ப்பு போன்ற பல்வேறு காரணங்களுக்காக அயல்நாட்டினர் சிங்கப்பூரை நோக்கி பயணிக்கின்றனர்.
விடுமுறையின் போது தாய்நாட்டிற்கு சென்றுவிட்டு மீண்டும் சிங்கப்பூருக்குத் திரும்பும் பயணிகள் அங்கிருந்து சில பொருள்களை வாங்கிவரத் திட்டமிடுவர்.ஆனால்,சிங்கப்பூர் விதிமுறைகளின்படி ஒரு சில பொருள்களைக் கொண்டுவர அனுமதி கிடையாது.

எத்தகைய பொருள்களைக் கொண்டுவரலாம் மற்றும் கொண்டுவரக் கூடாது போன்ற விதிமுறைகளைப் பற்றி இங்கே தெரிந்து கொள்ளலாம்.

அனுமதியில்லாத பொருள்கள் :
  • Chewing gum (மருத்துவக் காரணங்களுக்காக சுகாதார ஆணையம் அங்கீகரித்துள்ள பொருள்களுக்குத் தடையில்லை)
  • துப்பாக்கி வடிவத்தில் உள்ள பற்ற வைப்பான் (Lighter)
  • பட்டாசு
  • காண்டாமிருகத்தின் கொம்பு அழிந்து வரும் வனவிலங்குகளின் உடலிலிருந்து பெறப்படும் பொருள்கள்
  • ராணுவத் தொடர்புச்சாதனங்கள்
  • ஆபாசப் படங்கள்,புத்தகம் ,இதர பொருள்கள் புகையிலைப் பொருள்கள் புகையில்லா மற்றும் மின் சிகரெட்டுகள்
கட்டுப்பாடுகளுடன் கொண்டுவர அனுமதியுள்ள பொருள்கள்:
  • பன்றி இறைச்சியை அனுமதிக்கப்பட்ட நாடுகளிலிருந்து 5 கிலோ வரை கொண்டுவரலாம்.
  • மதுபானங்கள்: முழுவிவரங்களுக்கு இங்கே https://www.customs.gov.sg/individuals/going-through-customs/arrivals/duty-free-concession-and-gst-relief/
  • 400 கிராமுக்கு மேல் சிகரெட்டுகளைக் கொண்டு வர அவற்றுக்கு இறக்குமதி உரிமம் பெறவேண்டும்
  • ஒரு கிலோ வரையிலான சத்துணவுப் பொருள்
  • Hotdog, Ham போன்ற பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருள்களை 5 கிலோ அல்லது 5 லிட்டர் வரை கொண்டுவரலாம்.அவற்றின் மொத்த மதிப்பு 100 வெள்ளிக்கும் அதிகமாகக் கூடாது
  • அனுமதிக்கப்பட்ட நாடுகளிலிருந்து கடல் உணவு, இறைச்சி, பழங்கள், காய்கறிகள், முட்டைகள் முதலியவற்றை அவற்றுக்கான வரம்புடன் கொண்டு வர முடியும்.