Work pass அனுமதியில் வேலை பெற தந்திரமாக செயல்பட்ட வெளிநாட்டு ஊழியருக்கு சிறை – 19 ஊழியருக்கு நிரந்தர தடை

ஊழியர்களின் சம்பளத்தை
MOM

சிங்கப்பூரில் போலியான சேஃப்டி கோர்ஸ் (Safety course) சான்றிதழைப் பயன்படுத்தி வேலையை பெற்ற ஊழியருக்கு நேற்று (பிப். 24) 6 வார சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

இதில் 39 வயதான ஹனிஃப் மியா எம்.டி நூருல் இஸ்லாம் என்ற அந்த வெளிநாட்டு ஊழியர், தவறு என்று தெரிந்தும் போலியான சான்றிதழைப் பயன்படுத்தி ஃபார்ம்வொர்க் மேற்பார்வையாளர் வேலையை பெற்றுள்ளார்.

கட்டுமான கனரக வாகனத்தில் இருந்து தூக்கி வீசப்பட்ட வெளிநாட்டு ஊழியர்… பரிதாபமாக உயிரிழப்பு

தற்போது சட்டத்திற்கு புறம்பாக வேலையை பெற்ற குற்றத்தை அவர் ஒப்புக்கொண்டதாக மனிதவள அமைச்சகம் (MOM) தெரிவித்துள்ளது.

அவர் 2015ஆம் ஆண்டு இந்த போலியான ஃபார்ம்வொர்க் சேஃப்டி கோர்ஸ் சான்றிதழைப் பெற்றதாக அமைச்சகம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

பின்னர் 2020ஆம் ஆண்டு செப்டம்பர் மற்றும் டிசம்பர் மாதத்துக்கு இடையில், அந்த போலிச் சான்றிதழின் அடிப்படையில் குறைந்தது நான்கு முறை ஃபார்ம்வொர்க் மேற்பார்வையாளராக நியமிக்கப்பட்டார் அவர்.

கொடூரமாக சண்டையிட்டு கொண்ட இருவர்: வலைத்தளங்களில் வைரலான வீடியோ – நெட்டிசன்கள் அதிருப்தி

முன்னர்

முன்னதாக கடந்த ஆண்டு ஜூலை மாதம், Work pass அனுமதி விண்ணப்பங்களில் தவறாக தகவலை அளித்த இரண்டு இந்தியர்கள் சிக்கினர், ஒருவருக்கு ஒரு வாரமும் மற்றவர் நான்கு வாரங்கள் சிறை தண்டனையும் விதிக்கப்பட்டது.

அதாவது, இதுபோன்ற குற்றத்திற்காக விசாரிக்கப்பட்ட 20க்கும் மேற்பட்ட வெளிநாட்டு ஊழியர்களில் அவர்களும் அடங்குவர்.

கூடுதலாக, 19 பேர் சிங்கப்பூரில் எதிர்காலத்தில் வேலை செய்ய நிரந்தரமாகத் தடை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Work Permit வைத்துள்ளவர்கள் உட்பட 400க்கும் மேற்பட்டோருக்கு சிங்கப்பூர் நுழைய அனுமதி!