இறந்த பாட்டியை நினைத்து வாடும் பேரன்… பாட்டியைக் காண Google Mapsஐ நாடுவதாக TikTokஇல் வெளியிட்ட வீடியோ வைரல்!!

சிங்கப்பூரின் வடக்கு மண்டலத்தில் மறைந்த பாட்டியைக் காண முயற்சிக்கும் அவரது ஜரோம் (Jerome) என்ற பேரன் Google Mapsஐ நாடுவதாக TikTokஇல் வீடியோ வெளியிட்டுள்ளார். வெளியாகியுள்ள தகவல்களின்படி, அவரது பாட்டி, சிங்கப்பூரின் வடக்கு திசையில் உள்ள ஹவ்காங்கில் (Hougang) சாலையைக் கடக்கக் காத்திருந்ததாக Google Mapsஇல் அவர் மறைவதற்கு முன்னர் பதிவாகியுள்ளது. எப்போதும் தன் கூடவே இருந்த பாட்டி தற்போது இல்லை என்ற உண்மையை பேரனால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. மேலும், சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டங்களின் போது இறந்த பாட்டியைக் காண முடியவில்லை என்ற ஏக்கம் ஜரோமை கவலைக்கு ஆளாக்கியுள்ளது.

தனது பாட்டி குறித்து வீடியோவில் அவர் பதிவிட்டுள்ளதாவது; “என் பாட்டி என் நினைவிற்கு வரும்போதெல்லாம் நான் Google Mapsஐ திறந்து பார்ப்பேன். அவர் உண்மையிலேயே அங்கு நிற்பது போன்ற உணர்வு எனக்கு உண்டாகும். அவர் எப்போதும் ஏன் உள்ளத்தில் நிலைப்பார்” என்பதாகும்.

மேலும், அவர் பதிவிட்டுள்ள இந்த வீடியோ இணையவாசிகள் அனைவரையும் நெகிழச் செய்துள்ளது. அதுமட்டுமின்றி அவர் பதிவிட்டுள்ள வீடியோ அதிவேகமாக இணையத்தில் வைரலாகியுள்ளது. இதுவரை சுமார் 100,000 பேர் பார்வையிட்டுள்ள அந்த வீடியோவுக்கு கமெண்ட்ஸ் குவிந்த வண்ணம் உள்ளன. அந்த வீடியோவைப் பார்த்ததும் தங்கள் குடும்பத்தில் இறந்தவர் நினைவுக்கு வந்ததாகப் பல இணையவாசிகள் கருத்துகளைப் பகிர்ந்துகொண்டுள்ளனர்.