கலிஃபோர்னியாவைச் சேர்ந்த சென். கமலா ஹாரிஸ் (55 வயது) நேற்று செவ்வாயன்று ஜனநாயகக் கட்சியின் ஜனாதிபதி போட்டியிலிருந்து விலகினார்.
இந்த விலகல் பற்றி மின்னஞ்சலில், ஹாரிஸ் கூறுகையில்,”நிதி ஆதாரங்களைக் போதுமானதாக இல்லை” என்றார்.
மேலும் கூறுகையில், “எனது ஆதரவாளர்களான உங்களுக்கு ஆழ்ந்த வருத்தத்துடனும், நன்றியுடனும் – நான் எனது பிரச்சாரத்தை நிறுத்தி கொள்கிறேன்.” என்றும் கூறினார்.
கமலா ஹாரிஸ் போட்டியிலிருந்த ஒரே சிறுபான்மை இன வேட்பாளர். ஆனால், அவருடைய பிரச்சாரக் கொள்கைகள் ஆப்பிரிக்க – அமெரிக்க வாக்காளர்களிடையே அதிகம் ஏற்றுக்கொள்ளப்படவில்லை.
மேலும், கலிஃபோர்னியாவிலும் ஹாரிஸ் அதிக அளவு வாக்குகளைப் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அவர் அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றிருந்தால் அப்பதவியை ஏற்ற முதல் பெண்ணாக இருந்திருப்பார்.