கவியரசு கண்ணதாசன் பாட்டுத் திறன் போட்டி – உங்கள் திறமையை உலகிற்கு வெளிக்காட்ட ஓர் அறிய வாய்ப்பு !!

Kannadasan Song contest

சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம் ஆண்டுதோறும் ஒருங்கிணைத்து நடத்தி வரும் கவியரசு கண்ணதாசன் விழா, இந்தாண்டு வரும் நவம்பர் 16ஆம் தேதி சிறப்பாக நடைபெற உள்ளது.

இவ்வாண்டும் இரண்டு பிரிவுகளாகக் கண்ணதாசன் பாட்டுத் திறன் போட்டி வரும் 06.10.2019 அன்று நடைபெறும். 6 வயது முதல் 14 வயது வரை உள்ளவர்களுக்கு ஒரு பிரிவாகவும் (06.10.2005 முதல் 06.10.2013 வரை) 14 வயதிற்கு மேலுள்ளவர்களுக்கு (06.10.2005க்கு முன்னர் பிறந்தவர்கள்) ஒரு பிரிவாகவும் போட்டி நடைபெறும்.

மாணவர்களும், பொது மக்களும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கலாம். கவியரசு கண்ணதாசன் இயற்றிய திரைப்பாடல்கள் இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. அந்தப் பட்டியலில் உள்ள பாடல்களில் ஏதாவது ஒரு பாடலைத் தேர்வு செய்து பாட வேண்டும்.

இந்தப் போட்டியில் சிறுவர் பிரிவுக்கு ஒரு குரல் பாடல்களையும் பெரியவர் பிரிவுக்கு இருகுரல் பாடல்களையும் (ஆணும் பெண்ணும்/ஆணும் ஆணும்/பெண்ணும் பெண்ணும்) பாட வேண்டும். சிறுவர் பிரிவில் தனியாகவும், பெரியவர் பிரிவில் இருவர் இருவராகவும் பதிவு செய்ய வேண்டும்.

கண்ணதாசன் பாட்டுத்திறன் போட்டிக்குப் பதிவு செய்ய இறுதி நாள் : 29.09.2019

கூடுதல் விவரங்கள் அறிய :http://singaporetamilwriters.com/kannadasan_contest/ 

பதிவு செய்ய  : https://docs.google.com/forms/d/e/1FAIpQLSeCRqyt-GVZe09N0ziDPUUayVvMHotGFzBn3hQ-lTZ-d2nzQA/viewform