பழசுக்கு மவுசு கூடுது… பிரியாணியை பின்னுக்கு தள்ளிய பழையசோறு..!

சென்னையில் பழைய சோற்றின் விலை பிரியாணியை விட அதிகம், நம்பமுடியவில்லையா?

ஆம், மாறிக்கொண்டே வரும் உணவு பழக்கவழக்கங்கள், புதுப்புது உணவுகள், ஃபாஸ்ட் ஃபுட், ஜங்க் ஃபுட்ஸ் என வகை வகையான உணவுகள் வந்துகொண்டே இருக்கும் காலகட்டத்தில் பழைய சோற்றின் மவுசு குறையவே இல்லை. பொதுவாக உணவு வகைகளில் பிரியாணி என்றால் அதன் மதிப்பும், அதன் ரசிகர்களும் என்றுமே அதிகம் தான்.

சென்னையில் உள்ள ஒரு உணவகத்தில் பிரியாணி விலையை விட பழையசோறு விலை அதிகமாக உள்ளது. பழசுக்கு என்றுமே மவுசு அதிகம், அதாவது ‘ஓல்ட் இஸ் கோல்ட்’ என்ற வசனத்திற்கு ஏற்ப இந்த விலை அமைந்துள்ளது.

அதில் பிரியாணி 140 ரூபாய் என்றும், பழைய சோறு 200 ரூபாய் என்றும் விலை பட்டியலிடப்பட்டுள்ளது.

இன்றைய காலகட்டத்தில் பழைய சோற்றின் தேவை அதிகரித்திருப்பதை இந்த விலை நமக்கு உணர்த்துகிறது. என்னதான் பிரியாணி சுவையாகவும், தரமாகவும் இருந்தாலும் பழைய சோறு முன் நிற்க முடியாது என்று சொன்னால் அது மிகையாகாது.

நம் முன்னோர்கள் வாழையடி வாழையாக அருந்தி வந்த பாரம்பரிய உணவுகள் என்றுமே அழியாது என்பதற்கு இது ஒரு உதாரணம்.