உலகிலேயே அதிக நேரம் பயணிக்கும் முதல் விமானம்; எத்தனை மணி நேரம் தெரியுமா?

FILE PHOTO

ஆஸ்திரேலியாவின் குவாண்டஸ் என்னும் விமான நிறுவனம், நீண்ட நேரம் பயணிக்கின்ற வகையிலான விமானத்தை அறிமுகம் செய்துள்ளது.

இந்த விமானம் நாளை வெள்ளிக்கிழமை (அக்ட்., 18) அன்று அதன் முதல் நீண்ட நேர பயணத்தைத் தொடங்க இருக்கின்றது என தகவல்கள் வெளியாகியுள்ளன. அந்தவகையில், தொடர்ச்சியாக 20 மணி நேரம் வானில் பறக்க இருக்கிறது இந்த விமானம்.

உலகிலேயே அதிக நேரம் இயங்கக்கூடிய முதல் விமானம் என்ற அந்தஸ்தை பெற்றுள்ளது. அந்தவகையில், முதல் முறையாக அமெரிக்காவில் இருந்து ஆஸ்திரேலியாவின் சிட்னி பகுதிக்கு தனது முதல் பயணத்தை தொடங்க உள்ளது.

இந்நிலையில், வெள்ளிக்கிழமை சிட்னியில் இருந்து புறப்படும் அந்த விமானம் தொடர்ச்சியாக 20 மணி நேரம் பயணித்தவாறு ஞாயிற்றுக்கிழமை காலை அமெரிக்காவை வந்து சேரும் என குவாண்டஸ் நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.

இந்த பயணத்திற்கு முன்னதாக, விமானம் நீண்ட தூர பயணத்தை சமாளிக்குமா என்பதனை ஆய்வும் செய்யும் வகையில், பலபரீட்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அந்தவகையில், தொடர்ச்சியாக இதுவரை மூன்று முறை 19 மணி நேரம் இடைவிடாது பயணிக்க வைத்து அந்த விமானம் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது.

இத்திட்டத்திற்கு ‘புராஜெக்ட் சன்ரைஸ்’ என்ற பெயரை அது வைத்துள்ளது. தொடர்ந்து, ஆஸ்திரேலியாவின் முக்கிய நகரங்களான பிரிஸ்போன், சிட்னி மற்றும் மெல்போர்னில் இருந்து நியூயார்க் மற்றும் லண்டன் வரை இடைவிடாமல் இயக்க திட்டமிட்டிருக்கின்றது குவாண்டஸ்.

இந்த விமானத்தில், அதிகபட்சமாக 40 பயணிகளை மட்டுமே அழைத்து செல்ல அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது. அதில், விமான பணியாளர்களும் அடங்குவர் என்பது குறிப்பிடத்தக்கது.

பயணிகளின் பாதுகாப்பு மற்றும் விமானத்தை எப்போதும் கண்கானிக்கின்ற வகையில் நிபுணர்கள் மற்றும் மருத்துவர்கள் குழு நியமிக்கப்பட்டிருப்பதாக கூறப்பட்டுள்ளது.

Source: Simple Flying