Rasi Palan 11th September 2019: இன்றைய ராசிபலன்

Rasi palan today
Rasi palan today

Today Rasi Palan, 11th September 2019 Rasi Palan: ராசிபலன் ஜாதகம் அல்ல. நம் கிரக நிலைகளின் அடிப்படையில் கணிக்கப்படும் ஒரு நம்பிக்கை. நம் அன்றாட வாழ்க்கை பயணத்தில் நிகழக் கூடும் மாற்றங்களை அறியும் நம்பிக்கை இது. உங்கள் தமிழ் மைக்செட் தளத்தின் மூலம் நீங்கள் உங்களது தினசரி பலனை தெரிந்து கொள்ளலாம்.

Rasi Palan 11th September 2019: இன்றைய ராசி பலன், செப்டம்பர் 11, 2019

ராசி (குறிப்பிட்ட நாட்களில் அந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்)

மேஷம் (மார்ச் 21 – ஏப்ரல் 20)

இன்றைய நாளின் புகழுக்கு நீங்கள் மட்டுமே காரணம் அல்ல என்பதை உணர்வீர்கள். நண்பர்கள் மற்றும் உறவினர்கள் தக்க சமயத்தில் ஆதரவுக்கரம் நீட்டுவர். நீங்களும் மற்றவர்களுக்கு உதவ முன்வருவீர்கள். உங்கள் நேர்மைக்கு உரிய பரிசு கிடைக்கும் நாள்.

ரிஷபம் (ஏப்ரல் 21 – மே 21)

எதிர்பாராத திருப்பங்கள் நிகழும் நாள். தற்போதைய நிலையில் இருந்து ஏற்றம் பெறுவதற்கான காலநிலை தென்படும். மகிழ்ச்சிதரும் செய்திகள் உங்களை நாடிவரும்.

மிதுனம் (மே 22 – ஜூன் 21)

குடும்ப உறுப்பினர்களுடன் முக்கியமான விசயங்கள் குறித்து கலந்தாலோசனை மேற்கொள்வீர்கள். அவர்களுடன் பொழுதை கழிப்பீர்கள். விருந்து மற்றும் விசேஷங்களில் பங்கெடுத்துக்கொள்வீர்கள். இதுபோன்ற தருணம் மீண்டும் வராதா என்ற வகையில் இன்றைய நாள் இருக்கும்.

கடகம் (ஜூன் 22 – ஜூலை 23)

தங்களின் எதிர்பார்ப்புகளுக்கேற்ற வகையில் நிகழ்வுகள் நடைபெறும். தொழில் விவகாரங்களில் பங்குதாரர்களின் ஆதரவுக்கரம் பேருதவியாக இருக்கும். மகிழ்ச்சியான நாள்.

சிம்மம் (ஜூலை 24 – ஆகஸ்ட் 23)

மனக்கட்டுப்பாடு அவசியம் தேவைப்படும் நாள். பழிவாங்கும் எண்ணங்களை அறவே தவிர்ப்பது நல்லது. குடும்ப உறுப்பினர்களிடம் கோபத்தை காட்டவேண்டாம். நிதானம் காப்பது நல்லது.

கன்னி (ஆகஸ்ட் 24 – செப்டம்பர் 23)

பெரிய சவால்களை எதிர்கொள்ள துணிவீர்கள். குடும்ப விவகாரங்களில் முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். தனிமையை விரும்புவீர்கள்.

துலாம் (செப்டம்பர் 24 – அக்டோபர் 23)

சமூக விவகாரங்களில் அதிக ஈடுபாடு கொள்வீர்கள். பணியிடங்களிலும் மற்றவர்களை செம்மைப்படுத்துவீர்கள். உங்களின் வெற்றி தோல்விக்கு நானே காரணம் என்று பொறுப்பு ஏற்பீர்கள்.

விருச்சிகம் (அக்டோபர் 24 – நவம்பர் 22)

திருப்புமுனைகள் ஏற்படும் நாள். பணவரவு திருப்தியாக இருக்கும். காலம் பொன் போன்றது என்பதை உறுதியாக கடைபிடிப்பீர்கள். கால விரயத்தை தவிர்ப்பீர்கள்.

தனுசு (நவம்பர் 23 – டிசம்பர் 22)

இந்த உலகம் நம்மை திரும்பி பார்க்க வேண்டும் என்று நினைப்பீர்கள். அசாத்திய செயல்களை செய்ய துணிவீர்கள். நட்புகளிடம் இடைவெளி ஏற்படுத்திக்கொள்வீர்கள்.

மகரம் (டிசம்பர் 23 – ஜனவரி 20)

மன சஞ்சலம் மற்றும் பாதுகாப்பற்ற இடத்தில் இருப்பதை போன்று உணர்வீர்கள். தேவையற்ற விசயங்களை எண்ணி மனம் வருந்துவீர்கள். நண்பர்கள் தக்கசமயத்தில் உதவிக்கரம் நீட்டுவர்.

கும்பம் (ஜனவரி 21 – பிப்ரவரி 19)

வெற்றி இலக்கை நோக்கி முன்னேறுவீர்கள். கிரகங்களின் சாதகமான பார்வையினால், தொட்டே செயல்களில் வெற்றி கிடைக்கும். உங்களின் கருத்துகளுக்கு மற்றவர்களின் பாராட்டு கிடைக்கும்.

மீனம் (பிப்ரவரி 20 – மார்ச் 20)

இயந்திர பணியாளர்கள் தங்கள் பணிகளில் கவனமுடன் இருப்பது நல்லது. விபத்து ஏற்பட வாய்ப்புண்டு. பணவரவு திருப்தியாக இருக்கும். கணவன் – மனைவி இடையே அன்யோன்யம் அதிகரிக்கும்.