Rasi Palan 30th August: இன்றைய ராசிபலன்

Rasi Palan 30th August 2019
Rasi Palan 30th August 2019

Today Rasi Palan, 30th August 2019 Rasi Palan: ராசிபலன் ஜாதகம் அல்ல. நம் கிரக நிலைகளின் அடிப்படையில் கணிக்கப்படும் ஒரு நம்பிக்கை. நம் அன்றாட வாழ்க்கை பயணத்தில் நிகழக் கூடும் மாற்றங்களை அறியும் நம்பிக்கை இது. உங்கள் தமிழ் மைக்செட் தளத்தின் மூலம் நீங்கள் உங்களது தினசரி பலனை தெரிந்து கொள்ளலாம்.

Rasi Palan 30th August 2019: இன்றைய ராசி பலன், ஆகஸ்ட் 30, 2019

ராசி (குறிப்பிட்ட நாட்களில் அந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்)

மேஷம் (மார்ச் 21 – ஏப்ரல் 20)

உங்கள் மீதான விமர்சனங்களை மனமுவர்ந்து ஏற்றுக் கொள்ளுங்கள். பாராட்டுகளை அந்த நொடியே மறந்து விடுங்கள். அடுத்து வரும் சில நாட்களுக்கு உங்கள் மீதான அழுத்தம் குறையும். குடும்பத்துடன் செலவிட முடியாமல் தவறவிட்ட நேரத்தை, வேறொரு ரூபத்தில் அனுபவிப்பீர்கள்.

ரிஷபம் (ஏப்ரல் 21 – மே 21)

தவறுகளை திருத்திக் கொள்ளுங்கள். உங்களின் இன்றைய சேமிப்பு நாளை நிச்சயம் கைக்கொடுக்கும். நிதானமாக யோசித்து எந்தவொரு செயலிலும் முடிவெடுங்கள். பெற்றவர்களின் மனம் குளிர நடந்து கொண்டாலே உங்களின் வெற்றி உறுதி செய்யப்பட்டுவிடும்.

மிதுனம் (மே 22 – ஜூன் 21)

தேவையில்லாத விவகாரங்களில் தலையிட வேண்டாம். குடும்பங்களுடன் அதிகம் நேரத்தை செலவிட முயற்சி செய்யுங்கள். வெளிநாடுகளுக்கு செல்லும் வாய்ப்புகள் கிடைக்கும். அதற்காக முயற்சி செய்து கொண்டிருப்பவர்களுக்கு விரைவில் நல்ல செய்தி கிட்டும்.

கடகம் (ஜூன் 22 – ஜூலை 23)

பெற்றவர்களின் மீது வைத்திருக்கும் அன்பை அவர்களிடமே வெளிக்காட்டாமலே இருப்பது தான் உங்கள் பிரச்சனை. வாயைத் திறந்து பேசுங்கள். மௌனம் எல்லா நேரத்திலும் உங்களுக்கு நல்ல பெயரைப் பெற்றுத் தராது.

சிம்மம் (ஜூலை 24 – ஆகஸ்ட் 23)

வெற்றிகரமான நாள் இது. பணியிடத்தில் நல்ல பெயர் கிடைக்கும். காதல், திருமணம் தித்திப்பாக இருக்கும். பல நாட்கள் இழுத்துக் கொண்டிருக்கும் வழக்குகள் முடிவு பெறும். நல்ல வேலை வாய்ப்புகள் கிட்டும்.

கன்னி (ஆகஸ்ட் 24 – செப்டம்பர் 23)

உடல் ஆரோக்யத்தில் அக்கறை தேவை. குளிர்ந்த பண்டங்களை எடுத்துக் கொள்ள வேண்டாம். கிரகங்கள் சாதகமாக இல்லாத காரணத்தால், மருத்துவர்களிடம் போக வேண்டிய நிலை ஏற்பட வாய்ப்புள்ளது. எச்சரிக்கை தேவை.

துலாம் (செப்டம்பர் 24 – அக்டோபர் 23)

அரசு பணியில் இருப்போருக்கு நல்ல செய்தி காத்திருக்கிறது. இன்று பல சஸ்பென்ஸ்கள் உங்களை மகிழ்விக்கும். வாகனங்கள் வாங்கும் யோகம் உள்ளது. புரிதலில் சற்று சிரமப்படுவீர்கள்.

விருச்சிகம் (அக்டோபர் 24 – நவம்பர் 22)

போதும் என்ற உள்ளம் வேண்டும். அதை நீங்கள் ஃபாலோ செய்வது நல்லது. உணவில் கட்டுப்பாடு தேவை. மதம் சார்ந்த நம்பிக்கையில் நாட்டம் அதிகமாகும். மற்றவர்களை ஏளனமாக பார்ப்பதை தவிர்க்க வேண்டும்.

தனுசு (நவம்பர் 23 – டிசம்பர் 22)

சிறப்பான நாள். நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சிக்கும் பிரதிபலன் உண்டு. அதனை அனுபவிக்கும் பாக்கியம் இன்று உங்களுக்கு உள்ளது. நண்பர்களுக்கு உதவி செய்வீர்கள். பொழுதுபோக்கில் நாட்டம் செலுத்துவீர்கள்.

மகரம் (டிசம்பர் 23 – ஜனவரி 20)

குடும்பத்தில் சலசலப்பு ஏற்படும். கணவன்-மனைவி உறவில் உரசல் உண்டாக வாய்ப்புள்ளது. காதலில் பிரிவுகள் உண்டாகலாம். பணியிடத்தில் நீங்கள் விரும்பாவிட்டாலும் வெற்றி வந்தே தீரும்.

கும்பம் (ஜனவரி 21 – பிப்ரவரி 19)

புதிய பரிமாணத்தில் ஒவ்வொரு விஷயத்தையும் அணுகுவீர்கள். உங்களின் முடிவுகளை இந்த அணுகுமுறை மாற்றும். வெற்றியோ, தோல்வியோ அதை நீங்கள் ஏற்றுக் கொண்டே ஆக வேண்டும். கல்வியில் முன்னேற்றம் இருக்கும். பணியிடத்தில் சில சங்கடங்கள் நிலவினாலும் பொறுமை காப்பது நல்லது.

மீனம் (பிப்ரவரி 20 – மார்ச் 20)

நண்பர்களின் ஆலோசனைகளை கேட்டு செயல்பட்டது போதும். உங்களின் அனைத்து முடிவுகளிலும் மற்றவர்களின் தலையீடு இருக்கும் பட்சத்தில், உங்களுக்கு அது எதிராக கூட அமைய வாய்ப்பிருக்கிறது. சுமாரான நாள் இன்று.