“ஆடையின் சமுத்திரம்” சிங்கை வந்தடைந்த சேலையின் சரித்திரம்.!

Sea of Cloths

சிங்கப்பூரின் 200 ஆண்டு நிறைவை நினைவு கூறும் ஒரு பகுதியாக சிங்கப்பூர் இந்தியன் தியேட்டர் மற்றும் எக்ஸ்பிளோரர் (SITFE) நடத்தும் “ஆடையின் சமுத்திரம்” சிங்கை வந்தடைந்த சேலையின் சரித்திரம்.

சிங்கப்பூரில் National Museum (The Salon) அரங்கில் வரும் அக்டோபர் 19 தேதி மாலை 2 மணி முதல் 7 மணி வரை நடைபெற உள்ளது.

இந்த ஆடையின் சமுத்திரம் 80 நிமிட தயாரிப்பு, ஜவுளித் தொழிலுக்கு மரியாதை செலுத்தும் விதமாக உருவாக்கப்பட்டுள்ளது. மேலும், புடவையின் அழகையும் சிங்கப்பூரின் வரலாறு, அடையாளம், கலாச்சாரம் மற்றும் வர்த்தகம் போன்றவற்றின் மீதான தாக்கங்களையும் இந்த ஆடையின் சமுத்திரம் பிரதிபலிக்கும் விதமாக உருவாக்கப்பட்டுள்ளது.

இதற்கான டிக்கெட் $32 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஹாட் லைன் டிக்கெட் தொடர்புக்கு : 8752 2813

டிக்கெட்டை ஆன்லைனில் புக் செய்ய: tinyurl.com/seaofcloth