திடீரென தோன்றிய மிகப் பெரிய பள்ளம் – சுரங்க நிறுவனத்தின் தொழிலளர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டதா?

sinkhole-chile
சிலி நாட்டின் தலைநகரான சான்டியாகோவிற்கு வடக்கே சுமார் 665 கிமீ (413 மைல்) தொலைவில் உள்ள ஒரு சுரங்கப் பகுதியில் வார இறுதியில் 25 மீ விட்டம் கொண்ட ஒரு மிகப்பெரிய பள்ளம் திடீரென தோன்றியது.இதற்கான காரணத்தை கண்டறிய சிலி அதிகாரிகள் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.சிலியில் உள்ள ஊடகங்கள் அனைத்தும் நிலத்தில் உள்ள மிகப்பெரிய துளையின் வான்வழிப் படங்களை வெளியிட்டது.

 

கனடிய நிறுவனமான லுண்டின் மைனிங்கால் வெட்டப்பட்ட நிலத்திலுள்ள துளையின் படங்கள் ஊடகங்களால் வெளியிடப்பட்டது.கடந்த ஜூலை 30, சனிக்கிழமையன்று துளை ஏற்பட்டதைப் பற்றி புவியியல் மற்றும் சுரங்கத் துறையின் தேசிய சேவையான செர்னேஜியோமின் அறிந்தது.துளை ஏற்பட்ட பகுதிக்கு சிறப்புப் பணியாளர்கள் அனுப்பப் பட்டதாக நிறுவனத்தின் இயக்குனர் தெரிவித்தார்.

 

துளையானது கணிசமான தூரம் கொண்டதாகவும்,தோராயமாக 200 மீட்டர் கீழே உள்ளது என்றும் அவர் கூறினார்.அந்தப் பகுதியில் நிறைய தண்ணீர் இருப்பதைத் தவிர வேறு எந்த பொருளையும் கண்டறியவில்லை என்றும் கூறப்படுகிறது.
துளைக்கு அருகில் அமைந்துள்ள அல்காபரோசா சுரங்கத்தின் நுழைவாயிலில் இருந்து வேலைத் தளம் வரையிலான பகுதிகள் மூடப்பட்டுள்ளதாக Sernageomin தெரிவித்துள்ளது.மேலும் இந்த திடீர் பள்ளத்தினால் எந்த தொழிலாளர்களும் அல்லது சமூக உறுப்பினர்களும் பாதிக்கப்படவில்லை என்று லுண்டின் மைனிங் தெரிவித்தது.

 

பள்ளத்திற்கான காரணத்தைத் தீர்மானிக்க ஒரு தொழில்நுட்ப ஆய்வு நடந்து வருவதாகவும் தெரிவித்தது.லுண்டின் மைனிங் 80 சதவீத சொத்தை வைத்திருக்கிறது, மீதமுள்ளவை ஜப்பானின் சுமிடோமோ கார்ப்பரேஷனிடம் உள்ளது.