பணிபுரியும் இடத்தில் ஒரே மனஅழுத்தம், நிம்மதியில்லை என்று புலம்புபவரா நீங்கள்.., அப்போ இந்த பதிவு உங்களுக்கும் தான்..!

Ten tips are effective and simple ways to reduce, manage and avoid personal stress in work Place

பணிபுரியும் இடத்தில் ஒரே மனஅழுத்தம், நிம்மதியில்லை என்று பலர் சொல்ல நாம் கேட்டிருப்போம். அதற்காகவே உலக சுகாதார அமைப்பு (WHO). சில வழிமுறைகளை உங்களுக்காக கூறியுள்ளது. பணி இடத்தில் சந்தோஷமாக இருக்க கீழ்காணும் விதிகளைப் பின்பற்றச் சொல்லுகிறது அந்த அமைப்பு;

1. யாரையும் நம்பாதீர்கள் ஆனால் எல்லோரையும் மதியுங்கள்.

2. பணியிடத்தில் நடப்பதை அங்கேயே விட்டுவிடுங்கள். பணியிடம் கிசுகிசுக்களை வீட்டிற்கோ அல்லது வீட்டின் கிசுகிசுக்களை பணியிடத்திற்கு கொண்டு செல்ல வேண்டாம்.

3. சரியான நேரத்திற்கு பணிக்கு வந்து, அதே போல சரியான நேரத்திற்கு பணியிலிருந்து செல்லுங்கள்.

4. நமது பணிக்கு தொடர்பில்லாத தேவையற்ற பேச்சுக்களை தவிருங்கள். இந்த பேச்சுக்களால் மோசமான பின்விளைவுகளையே சந்திக்க நேரிடும்.

5. எதையுமே எதிர்பார்க்காதீர்கள். யாரும் உதவினால் நன்றியோடு இருங்கள். யாரும் உதவாத பட்சத்தில் அக்காரியத்தை நீங்களே செய்து கொள்ளக் கற்பீர்கள்.

6. பணியை மிகச் சிறப்பாக செய்யுங்கள், அதற்கு அங்கிகாரம் கிடைத்தால் வாழ்த்துக்கள். உங்கள் அறிவாற்றலுக்கும் அடுத்தவர்களை நீங்கள் மதிக்கும் பாங்கிற்காகவுமே உங்களை அனைவரும் நினைவில் வைத்திருப்பார்கள்.

7. எப்பொழுதும் பணியிடத்தை கட்டிக்கொண்டு அழாதீர்கள். வாழ்க்கையில் செய்வதற்கு அதை விடவும் சிறந்த காரியங்கள் ஏராளம் உண்டு.

8. நான் எனும் அகங்காரத்தை அறவே ஒழியுங்கள். ஈகோ வேண்டவே வேண்டாம். சம்பளத்திற்காக அல்ல மனசாட்சிக்கு பயந்து வேலை செய்யுங்கள் நம்முடைய நற்குணங்களே நம் சொத்துக்கள். அவையே நம் சந்தோஷத்தின் ஊற்றுக்கண்.

9. அடுத்தவர் உங்களை எப்படி நடத்தினாலும் பணிவோடு இருங்கள். எல்லோரையும் எப்போதும் திருப்திப் படுத்திவிட முடியாது.

10. இறுதியில் நம் குடும்பம், நண்பர்கள், வீடு, ஆழ் மன அமைதியை விட எதுவும் பெரிதில்லை, என்பதை ஆழ்மனதில் நிறுத்துங்கள்.