வாட்சப்பில் அறிமுகமானது கைரேகை லாக் : ஆக்ட்டிவ் செய்வது எப்படி?

whatsApp scam in singapore indian

ஐபோன்களில் வழங்கப்பட்ட டச் ஐ.டி. மற்றும் ஃபேஸ் ஐ.டி. மூலம் வாட்ஸ்அப் செயலியைப் பாதுகாக்கும் வசதி தொடர்ந்து ஆண்ட்ராய்டு இயங்குதளத்திலும் வாட்ஸ்அப் பீட்டா பதிப்பில் சோதனை செய்யப்பட்டு வந்தது.

தற்போது இந்தப் பாதுகாப்பு அம்சத்தை சில தினங்களுக்கு முன் வாட்ஸ்அப் நிறுவனம் உலகம் முழுக்க அனைத்து பயனர்களுக்கும் வழங்க ஆரம்பித்துள்ளது. அதன்படி ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் பயன்படுத்துவோர் கைரேகை மூலம் செயலியை அன்லாக் செய்து கொள்ள முடியும்.

இதன் மூலம் மற்றவர்கள் உங்கள் அனுமதியின்றிக் வாட்ஸ்அப் செயலியை கையாள முடியாது.

வாட்ஸ்அப் ஆண்ட்ராய்டு செயலியில் கைரேகை லாக் அம்சத்தை செயல்படுத்துவது எப்படி?

  • முதலில் வாட்ஸ்அப் செட்டிங்ஸ் — அக்கவுண்ட் — பிரைவசி ஆப்ஷன்களை க்ளிக் செய்ய வேண்டும்
  • இனி பிரைவசி ஆப்ஷனில் கைரேகை லாக் எனும் ஆப்ஷன் தெரியும்
  • அடுத்து அம்சத்தை இயக்க கைரேகை மூலம் அன்லாக் செய்யக் கோரும் Unlock with fingerprint ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும்
  • ஸ்மார்ட்போனில் உள்ள கைரேகை சென்சார் அம்சத்தை உறுதிப்படுத்த வேண்டும்

செயலியை பாதுகாக்க வாட்ஸ்அப் மூன்று ஆப்ஷன்களை வழங்குகிறது. இவை தானாக லாக் செய்யக் கோரும் ஆப்ஷனில் காணப்படுகிறது. இவை செயலியை உடனே, ஒரு நிமிடத்திற்கு பின் மற்றும் முப்பது நிமிடங்களுக்கு பின் லாக் செய்யும் வசதியை வழங்குகிறது.

கைரேகை லாக் ஆன் செய்யப்பட்டதும், தரவுகள் தானாகவே மறைக்கப்பட்டு விடும். இந்த அம்சம் செயல்படுத்தப்பட்டு இருந்தாலும் வாட்ஸ்அப் அழைப்புகள் மற்றும் நோட்டிஃபிகேஷன்களில் இருந்து குறுந்தகவல்களுக்கு எப்போதும் போல் பதில் அளிக்க முடியும். புதிய பாதுகாப்பு அம்சம் பயனர்கள் செயலியை திறந்து அதனை பயன்படுத்த முயலும் போது தான் இயங்கும்.

எனினும், கைரேகை-லாக் ஆன் செய்யப்பட்ட நிலையில் நோட்டிஃபிகேஷன்களில் தரவுகள் தெரிய வேண்டாம் என நினைப்பவர்கள் அதனை Showcontent in notifications ஆப்ஷனில் மாற்றிக் கொள்ளலாம்.